கேப்டன் பதவி முக்கியம் இல்ல... இந்திய அணியின் நலனே முக்கியம்; கேப்டன் பதவியை இழந்தது குறித்து பெருந்தன்மையுடன் பேசிய ஷிகர் தவான் !! 1

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டது குறித்து தனக்கு சிறிதளவு கூட கவலை இல்லை என ஷிகர் தவான் பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 18,20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.

கேப்டன் பதவி முக்கியம் இல்ல... இந்திய அணியின் நலனே முக்கியம்; கேப்டன் பதவியை இழந்தது குறித்து பெருந்தன்மையுடன் பேசிய ஷிகர் தவான் !! 2

இந்த மாத இறுதியில் துவங்கும் ஆசிய கோப்பை தொடரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற சீனியர் வீரர்களுக்கு ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

கே.எல் ராகுல் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால், விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை போன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான கேப்டனாகவும் ஷிகர் தவானே நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், கே.எல் ராகுல் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டதால், அவரை ஜிம்பாப்வே தொடருக்கான அணியிலும் இணைத்த பிசிசிஐ., கே.எல் ராகுலையே கேப்டனாகவும் நியமித்தது. ஷிகர் தவான் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் பிசிசிஐ., அறிவித்தது.

கேப்டன் பதவி முக்கியம் இல்ல... இந்திய அணியின் நலனே முக்கியம்; கேப்டன் பதவியை இழந்தது குறித்து பெருந்தன்மையுடன் பேசிய ஷிகர் தவான் !! 3

ஷிகர் தவான் போன்ற சிறந்த வீரரை இப்படி அசிங்கப்படுத்துவது சரியானது அல்ல, அவரே ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் பேசி வந்த நிலையில், கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தனது சிறிதளவும் கவலை ஏற்படவில்லை என ஷிகர் தவான் பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.

கேப்டன் பதவி முக்கியம் இல்ல... இந்திய அணியின் நலனே முக்கியம்; கேப்டன் பதவியை இழந்தது குறித்து பெருந்தன்மையுடன் பேசிய ஷிகர் தவான் !! 4

இது குறித்து ஷிகர் தவான் பேசுகையில், “கே.எல் ராகுல் காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கே.எல் ராகுல் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். கே.எல் ராகுல் இந்திய அணியின் மிக முக்கியமான வீரர். ஆசிய கோப்பை நெருங்கி வரும் நிலையில், கே.எல் ராகுல் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளது இந்திய அணிக்கு நன்மை, அவரது தலைமையின் கீழ் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவது மகிழ்ச்சி. ஜிம்பாப்வே தொடர் கே.எல் ராகுலுக்கு முக்கியமானதாக இருக்கும், இந்த தொடரின் மூலம் கே.எல் ராகுல் நிறைய விசயங்களை கற்று கொண்டு, ஆசிய கோப்பை தொடருக்கும் தயாராகி கொள்வார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய ஷிகர் தவான், “ஜிம்பாப்வே அணியை நிச்சயமாக குறைத்து மதிப்பிட்டு விட மாட்டோம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்காக கடுமையாக போராடுவோம்” என்று தெரிவித்தார்.

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி;

கே.எல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் த்ரிபாட்டி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ஆவேஸ் கான், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர், சபாஷ் அஹமத்.

Leave a comment

Your email address will not be published.