இந்திய அணியின் மிரட்டல் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கே.எல் ராகுல் பெருமிதம் !! 1

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் போட்டி ஜிம்பாப்வேவின் ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் மிரட்டல் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கே.எல் ராகுல் பெருமிதம் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில் சகப்வா (34) மற்றும் பிராட் எவன்ஸ் (33*) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 40.3 ஓவரில் வெறும் 189 ரன்கள் மட்டுமே எடுத்த ஜிம்பாப்வே அணி ஆல் அவுட்டானது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், அக்‌ஷர் பட்டேல் மற்றும் பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில்லும், ஷிகர் தவானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இந்திய அணியின் மிரட்டல் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கே.எல் ராகுல் பெருமிதம் !! 3

போட்டியின் முதல் ஓவரில் இருந்தே ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட இந்த கூட்டணி, இலகுவாக ரன்னும் குவித்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களின் அனைத்து திட்டங்களையும் முறியடித்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கூட்டணி 30.5 ஓவரில் இலக்கையும் அடைந்து இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்துள்ளது. ஷிகர் தவான் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணியின் மிரட்டல் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்; கேப்டன் கே.எல் ராகுல் பெருமிதம் !! 4

இந்தநிலையில், ஜிம்பாப்வே அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல், பந்துவீச்சாளர்களை பாராட்டி பேசியுள்ளார்.

வெற்றி குறித்து கே.எல் ராகுல் பேசுகையில், “காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை போலவே தீபக் சாஹர், குல்தீப் யாதவ் போன்றோரும் காயத்தில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக விளையாடியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் மூன்ரு பேரும் காயம் காரணமாக கடினமான நாட்களை கடந்து தான் திரும்பி வந்துள்ளோம். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பந்துவீச்சாளர்கள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு விரைவாக விக்கெட் எடுத்து கொடுத்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.

இந்தியா ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி 20ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.