விடாமல் துரத்தும் காயம்... காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகிய தமிழக வீரர்; தரமான மாற்று வீரரை அறிவித்தது இந்திய அணி !! 1

காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய வாசிங்டன் சுந்தருக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 18,20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.

விடாமல் துரத்தும் காயம்... காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகிய தமிழக வீரர்; தரமான மாற்று வீரரை அறிவித்தது இந்திய அணி !! 2

இந்த மாத இறுதியில் துவங்கும் ஆசிய கோப்பை தொடரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற சீனியர் வீரர்களுக்கு ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இரு அணிகள் இடையேயான முதல் போட்டி 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தொடரில் இருந்து வாசிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ., அறிவித்துள்ளது.

விடாமல் துரத்தும் காயம்... காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகிய தமிழக வீரர்; தரமான மாற்று வீரரை அறிவித்தது இந்திய அணி !! 3

இது குறித்து பிசிசிஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டின் போது ஏற்பட்ட காயம் காரணமாக வாசிங்டன் சுந்தர் ஜிம்பாப்வே அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சபாஷ் அஹமத் ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்” என அறிவித்துள்ளது.

விடாமல் துரத்தும் காயம்... காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் இருந்து விலகிய தமிழக வீரர்; தரமான மாற்று வீரரை அறிவித்தது இந்திய அணி !! 4

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சபாஷ் அஹமத், பெங்களூர் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி அதில் 219 ரன்கள் குவித்ததோடு, 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி;

கே.எல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் த்ரிபாட்டி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ஆவேஸ் கான், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர், சபாஷ் அஹமத்.

Leave a comment

Your email address will not be published.