இந்தியா  ஆஸ்திரேலிய மூன்றாவது ஒருநாள் போட்டி முதல் இன்னிங்ஸ் ரிப்போர்ட் 1

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்தியா  ஆஸ்திரேலிய மூன்றாவது ஒருநாள் போட்டி முதல் இன்னிங்ஸ் ரிப்போர்ட் 2

இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து, தொடரையும் இழந்துவிட்ட நிலையில் இரு அணிகள் இடையேயான அதிக முக்கியத்துவம் இல்லாத கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

துவக்க வீரராக களமிறங்கிய தவான் மற்றும் சுப்மன் கில் ஜோடி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள் பின் களமிறங்கிய விராட் கோலி 78 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அணிக்கு ரன்களை சேர்த்தார்.எதிர்பாராதவிதமாக ஹஸல்வுட் வீசிய பந்தில் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார்.

இந்தியா  ஆஸ்திரேலிய மூன்றாவது ஒருநாள் போட்டி முதல் இன்னிங்ஸ் ரிப்போர்ட் 3

பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்தியா  ஆஸ்திரேலிய மூன்றாவது ஒருநாள் போட்டி முதல் இன்னிங்ஸ் ரிப்போர்ட் 4

பின் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரின் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது இதில் ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 92 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை இருந்தார் அதேபோன்று ரவீந்திர ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *