ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டி பெங்களூரில் இருந்து இடமாற்றம்! 1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் மாதம் துவங்க உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும்  3 டி20 ஆகிய போட்டிகளில் விளையாடியது. தற்போது ஆஸ்திரேலிய அணி மார்ச் மாதம் இந்தியா சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 5 ஒருநாள் தொடரில் ஆடுகிறது தற்போது முதல் டி20 போட்டி நடைபெறும் பெங்களூரு மைதானத்திலிருந்து அந்த போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்திய-ஆஸி. அணிகள் மோதும் ஒருநாள், டி20 தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் தற்போது இறுதிக் கட்டமாக ஒரு நாள் தொடரில் ஆடவுள்ளது இந்தியா. அதன் பின்பு நியூஸிலாந்தில் 5 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்களில் கொண்ட தொடரில் ஆடுகிறது.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டி பெங்களூரில் இருந்து இடமாற்றம்! 2

பின்னர் ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அதன் அட்டவணை
டி20 தொடர்:
முதல் டி20-பிப். 24, —பெங்களூரு—-.
இரண்டாம் டி20-பிப். 27, விசாகப்பட்டினம்.

ஒருநாள் தொடர்:
முதல் ஆட்டம்-மார்ச். 2, ஹைதராபாத்.
இரண்டாம் ஆட்டம்-மார்ச். 5, நாக்பூர்.
மூன்றாம் ஆட்டம்-மார்ச். 8, ராஞ்சி.
நான்காம் ஆட்டம்-மார்ச். 10, மொஹாலி.
ஐந்தாம் ஆட்டம்-மார்ச். 13., தில்லி.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டி பெங்களூரில் இருந்து இடமாற்றம்! 3

டி20 ஆட்டங்கள் இரவு 7.00 மணிக்கு தொடங்கும். ஒரு நாள் ஆட்டங்கள் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும்இதை பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் செளதரி
தெரிவித்துள்ளார்.

கடந்த 1980இல் இருந்து இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதுவரை 127 ஒரு நாள் ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் 45 ஆட்டங்களில் இந்தியாவும், 72 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன. 10 ஆட்டங்களில் முடிவு கிட்டவில்லை.
கடந்த 1980இல் டிச. 6-இல் மெல்போர்னில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கடைசியாக நாக்பூரில் 2017 அக்.1-இல் நடைபெற்ற ஆட்டத்தில் 7விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டி பெங்களூரில் இருந்து இடமாற்றம்! 4
அதன் பின் தற்போது ஓராண்டு கழித்து இந்தியாவும்-ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் தொடரில் மோதுகின்றன, தோனி, ஹார்திக் பாண்டியா:
உலகக் கோப்பை 2019-ஐ கருத்தில் கொண்டு அடுத்த 4 மாதங்களில் இந்திய அணி ஏராளமான ஒரு நாள் ஆட்டங்களில் ஆட உள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஒரு நாள் தரவரிசையில் இங்கிலாந்துக்கு பின்னர் உள்ளது.

ஆஸி., நியூஸி ஒரு நாள் தொடர்களை வென்றால் இந்தியா இதிலும் முதலிடத்தை பெறும் வாய்ப்புள்ளது.ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *