Cricket, India, South Africa, Rahul Dravid

முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்ற அதிக அளவில் வாய்ப்புள்ளதாக ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து 9 தொடர்களை கைப்பற்றியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளில் அசத்தி வருகிறது. குறிப்பாக புவனேஸ்வர்குமார், உமேஷ் யாதவ், மொகமது ஷமி, இசாந்த் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள்.

Cricket, India, Sri Lanka, Toss, First Test
India’s Mohammed Shami (C) celebrates with his teammates after he dismissed Sri Lanka’s Rangana Herath during the third day of the second Test cricket match between Sri Lanka and India at the Sinhalese Sports Club (SSC) Ground in Colombo on August 5, 2017. / AFP PHOTO / Lakruwan WANNIARACHCHI

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வலுவாக உள்ளதால், தென்ஆப்பிரிக்கா தொடரில் தற்போதைய இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணி முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை முதன்முறையாக கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது: ராகுல் டிராவிட் 1
Rohit Sharma lunges low to sweep one square , India v Sri Lanka, 3rd Test, Delhi, 2nd day, December 3, 2017
©BCCI

இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘மிகவும் வலுவாக திகழும் தற்போதைய இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. நாம் சிறந்த வேகப்பந்து வீச்சை கொண்டுள்ளோம். நமக்குத் தேவைப்பட்டால் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை வைத்துள்ளோம். அதேபோல் திறமையான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

Cricket, India, Nepal, Rahul Dravid

நான் ஏன் அதிக மகிழ்ச்சியடைகிறேன் என்றால், நம்முடைய பேட்ஸ்மேனக்ள ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தவர்கள். அவர்கள் 40 முதல் 50 டெஸ்டுகள் விளையாடியுள்ளனர். அங்குள்ள சூழ்நிலையில் சற்று அதிர்ஷ்டத்துடன், ஆடுகளத்தில் சற்று புற்கள் குறைவாக இருக்க வேண்டியது தேவை. இப்படி இருந்தால் நமக்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.

தென்ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை முதன்முறையாக கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது: ராகுல் டிராவிட் 2
Virat Kohli captain of India celebrates his Two Hundred runs during day two of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 3rd December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published.