ஐசிசி தொடர்களில் இந்தியா தொடர்ச்சியாக நன்றாக ஆடுகிறது: கவுதம் கம்பிர் 1

ஐசிசி தொடர்களில் இந்தியா எப்போதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என கவுதம் காம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது….

இந்திய அணி ஐசிச்தொடர்களில் வருகிறது என்று நாம் கூற முடியாது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நாம் வென்றோம். பின்னர் 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் என்றும் அதன் பின்னர் அடுத்தடுத்த 20 ஓவர்களில் அரையிறுதி, இறுதிப் போட்டியிலும் கலந்து கொண்ட பின்னர், 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆடினோம்.ஐசிசி தொடர்களில் இந்தியா தொடர்ச்சியாக நன்றாக ஆடுகிறது: கவுதம் கம்பிர் 2

மற்ற அணிகளை பார்த்தால் நன்றாக ஆடும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கூட இவ்வாறு தொடர்ச்சியாக ஐசிசி தொடர்களில் நன்றாக ஆடுவதில்லை. இந்தியா ஐசிசி தொடர்களில் எப்போதும் நன்றாக ஆடுகிறது என்று கூறினார் கவுதம் கம்பீர்.

இந்திய துவக்க வீரராக இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்த கவுதம் கம்பீர், இந்திய முன்னாள் கேப்டன் தோனியை கடுமையாக விமர்சித்துள்ளார். 2012ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மூன்று நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரில் ஆடியது. அதில் அணியை தேர்வு செய்வதில் தோனி எடுத்த முடிவு தவறானது என்று கூறியுள்ளார். சமீபத்தில் ஆந்திராவுடனான ரஞ்சி போட்டியுடன் ஓய்வு பெற்றார் கம்பீர்.

2012ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரில் சச்சின் , சேவாக் மற்றும் கம்பீர் ஒரே அணியில் இடம்பெறக்கூடாது என்ற முடிவை தோனி எடுத்ததாகவும். ஆனால் அணியின் செயல்பாடு சிறப்பாக இல்லாததால் தன் முடிவை மாற்றி மீண்டும் மூவரையும் களமிறக்கினார்.தோனியின் முடிவில் தோனியே தீர்க்கமாக இல்லை என்று கூறியுள்ளார்.

ஐசிசி தொடர்களில் இந்தியா தொடர்ச்சியாக நன்றாக ஆடுகிறது: கவுதம் கம்பிர் 3

மேலும் கம்பீர் 2015ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான அணியை 2012ல் தேர்வு செய்தது தவறு, அது தன்னை அதிர்ச்சியடைய செய்ததாக கூறியுள்ளார்.

2015ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை மனதில் கொண்டு சச்சின், சேவாக், கம்பீர் மூவரையும் ஒரே அணியில் சேர்க்கக்கூடாது என்ற முடிவை தோனி 2012ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் எடுத்தார்.

இது ஒரு கிரிக்கெட்டராக எனக்கு பெரிய அதிர்ச்சிகரமானதான இந்த விஷயம் இருந்தது. நாங்கள் மூவரும் இணைந்து ஆடுவதையே விரும்பினோம். அது அணியின் வெற்றிக்கு உதவும் என்று கூறினோம். அதற்கு உதாரணம் ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் சச்சினும், சேவாக்கும் துவக்க வீரர்களாக களமிறங்கினார்கள், நான் மூன்றாம் இடத்திலும், விராட் நான்காவது இடத்திலும் களமிறங்கி மிகப்பெரிய ஸ்கோரை 37 ஓவர்களில் சேஸ் செய்தோம்.ஐசிசி தொடர்களில் இந்தியா தொடர்ச்சியாக நன்றாக ஆடுகிறது: கவுதம் கம்பிர் 4

ஆனால் தொடரின் ஆரம்பத்தில் நாங்கள் இணைந்து ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுழற்சி முறையே பின்பற்றப்பட்டது. இந்தியா அந்த தொடரில் 8 ஆட்டங்களில் 3 ஆட்டங்களை மட்டுமே வென்றது. மேலும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

அந்தத் தொடரில் விராட் கோலி அதிக ரன் குவித்தவீரராக இருந்தார். அதற்கடுத்து கம்பீர் தான் இரண்டாவது இடத்தில் இருந்தார்,

சேவாக் ஐந்து ஆட்டங்களில் ஆடி வெறு 65 ரன்களையும், சச்சின் டெண்டுகள் 7 ஆட்டங்களில் ஆடி 143 ரன்களையும் மட்டுமே குவித்திருந்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *