இந்திய அணி முதலிடத்தில் நீடிக்க, மேலும் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும்!! 1

இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது. மேலும், இரண்டாவது போட்டியின் வெற்றியில் ஐ.சி.சி ஒருநாள் போட்டிகான தர வரைசயில் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி முதலிடத்தில் நீடிக்க, மேலும் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும்!! 2

தற்போது, சர்வதேச கீர்க்கெட் வாரியத்தின் தகவலின் படி, இந்திய அணி 120 ரேட்டிங்குடன் தர வரிசைப்பட்டியளில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாப்ப்ரிக்க அணி 119 ரேட்டிங்குடன் உள்ளது.

இந்திய அணி 4ஆவது போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் அணியின் புள்ளி மற்றும் ரேட்டிங் அதிகமாகி முதலிடத்திலேயே நீடிக்கும். ஆனால், அந்த போட்டியில் தோற்க்கும் பட்சத்தில் 120 ரேட்டிங் என்பது குறைந்து 119 ஆக மாறும். இதில் தசம அடிப்படையில் இந்திய அணியின் ரேட்டிங் .14 தட்டுபாடாட இருக்கும்.

இதன் காரணமாக இந்திய அணி தென்னாப்ப்ரிக்காவிடம் முதலிடத்தை இழக்கும். அந்த முதலிடத்தை தக்க வைக்க கடைசி இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியையாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.

இந்திய அணி முதலிடத்தில் நீடிக்க, மேலும் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும்!! 3

முன்னதாக இந்திய அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தர வரிசைப் பட்டியளில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒருநாள் போட்டிக்கான தர வரிசைப்பட்டியளிலும் முதலிடத்திய பிடித்திருப்பது, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதிக்கத்தைக் காட்டுகிறது.

இந்திய கேப்டன்களில் தோனி மட்டுமே இந்திய அணியை மூவகையிளான (டெஸ்ட், ஒருநாள், டி20)  போட்டிகளிலும் முதலிடத்திற்க்கு அழைத்துச் சென்றுள்ளார். தற்போது விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அந்த மைகல்லை அடைய வைத்துள்ளார்.

அதுவும் கோலி இந்திய் அணியின் கேப்டனாக பொருப்பேற்ற 3 வருடங்களிலேயே இந்த சாதனையைப் படைத்துள்ளது ஆச்சரியமான ஒன்றாகும். கோலி தலைமையிளான இந்திய அணி எந்த ஒரு ஆட்டத்தியயும் ஆக்ரோசமாகத்தான் எதிர் கொள்கிறது.

டெஸ்ட் போட்டிகளை 3 நாளில் வெற்றி பெருவதும், ஒருநாள் போட்டிகளில் எதிரணியை நிலைகுழையச் செய்து மிகப்பெரிய விதயாசத்தில் வெற்றி பெருவது அதற்க்கு சான்றாகும்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிளான 3ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தோனியின் ஒரு கேபிடன்சி சாதனையை சமன் செய்துள்ளார்.

அனைத்து வகையான போட்டிகளிலும் சேர்த்து அடுத்தடுத்து தொடர்ச்சியாக வென்ற இந்திய கேப்டன்கள் சாதனையில் தற்போது தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்திய அணி முதலிடத்தில் நீடிக்க, மேலும் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும்!! 4

ஆஸ்திரேலிய அணியுடனா மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தோனியின் மற்றொரு கேபிடன்சி சாதனையை சமன் செய்துள்ளார் கோலி.

அதாவது,  சர்வதேச அரங்கில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

தற்போது 3ஆவது போட்டியின் வெற்றியின் மூலம் தோனியின் 9 தொடர் வெற்றிகள் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும் கோலி பல சாதனைகளை படைத்து வருகிறார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் 92 ரன் அடித்து அசத்தினார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.இந்த இன்னிங்சின் மூலம் தோனியின் ஒரு கேப்டன் சாதனையை சமன் செய்துள்ளார்.

 

இந்திய அணி முதலிடத்தில் நீடிக்க, மேலும் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும்!! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *