Cricket, Virat Kohli, India, Sri Lanka, West Indies

இலங்கை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவிருக்கிறது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

கண்டி பல்லக்கலே மைதானத்தில் இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.

டெஸ்ட் தொடருக்குப் பின்னர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்படவிருக்கிறது.

இதற்காக நடைபெறும் கூட்டத்தில் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற டோனி, இலங்கைத் தொடரில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவருகிறார்.

அவருடன் சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், பும்ரா ஆகியோரும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தம்பூலாவில் வரும் 20-ல் தொடங்குகிறது.

ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க அணித்தலைவர் விராட் கோஹ்லி மறுப்புத் தெரிவித்ததாக வெளியான தகவலை, அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

முதல் நாளின் சில சிறந்த சாதனைகள் :

1.நிதானமாக ஆடிய லோகேஸ் ராகுல் 65 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது அவர்  டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அடித்த 7 வது அரைசதம் ஆகும். இதன் மூலம் இதற்க்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக அரைசதம் அடித்த சாதணையை சமம் செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு 1

லோகேஸ் ராகுல் செய்த இந்த சாதணை இதற்க்கு முன்னர் 5 வீரர்கள் செய்துள்ளனர். அந்த பட்டியல் கீழே.

2.கடந்த 4 வருடத்தில் இலங்கை மண்ணில் தொடக்க ஆட்டகாரர்கள் 100 ரன்களுக்கு மேல் அடிப்பது இது இரண்டாவது முறையே ஆகும். இதற்க்கு முன்னர் பங்களாதேஸ் அணியின் தொடக்க வீரர்கள் 100+ ரன்கள் அடித்திருந்தனர்.

இலங்கைக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு 2

அது போக அயல் நாட்டு அணியின் தொடக்க வீரர்கள்  இலங்கை மண்ணில் விக்கெட் இழப்பின்றி  அடித்த அதிகபட்ச ரன்கள் 188 ஆகும். இதற்க்கு முன்னர் 1993ல் கொலும்புவில் நடத்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் மனோஜ் பிரபாகரும் நவ்ஜோத் சிங் சித்துவும் சேர்ந்த ஜோடி அடித்த 171 ரன்களே சாதனையாக இருந்தது.

3.இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அயல் நாட்டு அணியின் இடது கையி பேட்ஸ்மேன் அடித்த அதிக சதங்கள் 3 ஆகும். இன்று அதிரடியாக ஆடி சதம் கடந்த சிகர் தவானும் அந்த சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரயன் லாரா இலங்கை மண்ணில் 3 சதங்களை அடித்திருந்தார்.

இலங்கைக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு 3

இந்திய வீரர்கள் வெளிநாட்டு மண்ணில் ஒரே தொடரில்  அடித்த சதங்கள் 2 ஆகும். இன்று அதிரடியாக ஆடி சதம் கடந்த சிகர் தவானும் அந்த சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் 1993ல் வினோத் காம்லி, 1996ல் சவுரவ் கங்குலி, 2009ல் கவுதம் கம்பீர் இந்த சாதனைய செய்துள்ளனர்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *