ரீ எண்ட்ரீ கொடுக்கும் மிக முக்கிய வீரர்; மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி 24ம் தேதி துவங்க உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இரு அணிகள் இடையேயான மூன்றாவது போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதே போல் மறுபுறம் இரு அணி வீரர்களும் இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ரீ எண்ட்ரீ கொடுக்கும் மிக முக்கிய வீரர்; மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் கடந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த ஜஸ்ப்ரீட் பும்ராஹ் மீண்டும் இந்திய அணியில் இணைக்கப்பட்டு, குல்தீப் யாதவ் அணியில் இருந்து மீண்டும் நீக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர அணியில் வேறு எந்த பெரிய மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளதால், வீரர்களை மாற்றி இந்திய அணி பெரிய ரிஸ்க் எடுக்காது என்றே தெரிகிறது.

ரீ எண்ட்ரீ கொடுக்கும் மிக முக்கிய வீரர்; மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திர அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *