இரண்டு தமிழக வீரர்களுக்கு அணியில் இடம்; முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.

இரண்டு தமிழக வீரர்களுக்கு அணியில் இடம்; முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

டி.20 தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதால் மிகச்சரியான வீரர்களை மட்டுமே இந்திய நிர்வாகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடரை போன்று சொதப்பமாட்டார்கள் என நம்பப்படுகிறது.

ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால், கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட மாயன்க் அகர்வாலும், இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த டி.20 தொடரில் மாயன்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் அவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. மாயன்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் துவக்க வீரராக களமிறங்குவார் இல்லையெனில் கே.எல் ராகுல் துவக்க வீரராக களமிறக்கப்படுவார். மற்றொரு துவக்க வீரராக ஷிகர் தவான் களமிறங்குவார்.

இரண்டு தமிழக வீரர்களுக்கு அணியில் இடம்; முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் வழக்கம் போல் விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயரே களமிறங்குவார்கள். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மாற்றம் இருக்க வாய்ப்பே இல்லை, வழக்கம் போல ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கே இடம் கிடைக்கும் கூடுதலாக வாசிங்டன் சுந்தருக்கும் இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அதே போல் நடராஜன், பும்ராஹ் மற்றும் தீபக் சாஹர் போன்ற பந்துவீச்சாளர்களுக்கும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என தெரிகிறது.

இரண்டு தமிழக வீரர்களுக்கு அணியில் இடம்; முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 4

முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ஷிகர் தவான், மாயன்க் அகர்வால், விராட் கோஹ்லி (கேப்டன்), ஸ்ரேயஸ் ஐயர் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சாஹல்/சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி/நடராஜன், தீபக் சாஹர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *