ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பிரச்சனையே அவர் தான்... இப்ப அவரும் இல்ல; அதிரடியாக பேசிய முன்னாள் வீரர் !! 1
ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பிரச்சனையே அவர் தான்… இப்ப அவரும் இல்ல; அதிரடியாக பேசிய முன்னாள் வீரர்

இந்த நட்சத்திர வீரர் அணியில் இடம் பெறாமல் போனது ஆஸ்திரேலிய அணிக்கு தான் சாதகமாக அமைந்துள்ளது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் இயான் செப்பல் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை கெத்தாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பிரச்சனையே அவர் தான்... இப்ப அவரும் இல்ல; அதிரடியாக பேசிய முன்னாள் வீரர் !! 2

இந்தியா வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. பிப்ரவரி 9ம் தேதி துவங்கும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர், மார்ச் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த கிரிக்கெட் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெறும் என எதிர்பார்கப்படும் டெஸ்ட் தொடர் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பிரச்சனையே அவர் தான்... இப்ப அவரும் இல்ல; அதிரடியாக பேசிய முன்னாள் வீரர் !! 3

இதனால் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இப்போதே இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும் கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்திவருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பேசி வரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் இயான் செப்பல் ., இந்திய அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் இந்த டெஸ்ட் தொடரில் இடம் பெறாமல் போனது ஆஸ்திரேலிய அணிக்கு சந்தோசமான ஒரு செய்தியாகும் என செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பிரச்சனையே அவர் தான்... இப்ப அவரும் இல்ல; அதிரடியாக பேசிய முன்னாள் வீரர் !! 4

இதுகுறித்து இயான் செப்பல் பேசுகையில்., இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை இந்திய அணி உண்மையில் மிஸ் செய்யப்போகிறது, அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறாமல் போனது ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு நற்செய்தி ஆகும் இதை நினைத்து ஆஸ்திரேலியா அணி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ரிஷப் பன்ட் மட்டும் அணியில் இருந்தால் நிச்சயம் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருப்பார். அவர் அதிரடியாக ரண்களை குவித்து ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி எப்பொழுது வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர் என்று ரிஷப் பண்ட் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் செப்பல் பேசியிருந்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பிரச்சனையே அவர் தான்... இப்ப அவரும் இல்ல; அதிரடியாக பேசிய முன்னாள் வீரர் !! 5

கடந்த டிசம்பர் மாதம் கார் விபத்தில் உள்ளாகிய ரிஷப் பண்ட் முழுமையாக குணமாக 18 மாதங்கள் ஆகும் என்பதால் அவரை இந்திய அணி மிஸ் செய்யும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் யாருக்குமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *