கொஞ்சமாச்சும் நியாயமா நடந்துக்கங்ககடா; தேவை இல்லாமல் பேசும் சோயிப் அக்தர் !! 1

இங்கிலாந்து அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டிக்காகவது இந்திய அணி நியாயமான முறையில் ஆடுகளத்தை அமைக்க வேண்டும் என முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை மிக இலகுவாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றதால், இந்திய அணி இந்த தொடரில் ஒரு போட்டி வெல்வதே மிக கடினம் என எதிர்பார்க்கப்பட்டது.

கொஞ்சமாச்சும் நியாயமா நடந்துக்கங்ககடா; தேவை இல்லாமல் பேசும் சோயிப் அக்தர் !! 2

இதில் குறிப்பாக முதல் போட்டி நடைபெற்ற அதே சேப்பாக்கம் மைதானத்திலேயே இரண்டாவது போட்டியும் நடைபெற்றதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் வீரர்கள் பலரின் கணிப்புகளை தவிடு பொடியாக்கிய இந்திய அணி,இரண்டாவது போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தது.

இதனையடுத்து அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி வெறும் இரண்டே நாளில் நிறைவடைந்துவிட்டதால் இந்த போட்டியும், இந்த போட்டி நடைபெற்ற ஆடுகளமும் மிகப்பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இது போன்ற ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டிகளையே அழித்துவிடும் என்று யுவராஜ் சிங் உள்பட முன்னாள் வீரர்கள் பலரே கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கொஞ்சமாச்சும் நியாயமா நடந்துக்கங்ககடா; தேவை இல்லாமல் பேசும் சோயிப் அக்தர் !! 3

அகமதாபாத் பிட்ச் குறித்து ஆளாளுக்கு ஒரு கருத்து தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து பேசியுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர், கடைசி டெஸ்ட் போட்டிக்காவது இந்திய அணி நியாயமான முறையில் பிட்ச்சை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சோயிப் அக்தர் பேசுகையில், “3-வது டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தியது போன்ற ஆடுகளத்தில் விளையாட வேண்டுமா? ஆடுகளம் மிகப்பெரிய அளவில் டர்ன் ஆகியது. போட்டி 2 நாட்களில் முடிவடைந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. போட்டியை நடத்தும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியா மிகப்பெரிய, சிறந்த அணி. இந்தியா இங்கிலாந்தை இன்னும் வெல்ல முடியும் என்பதால், நியாயமான விளையாட்டு, நியாயமான ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும். இந்தியா பயப்பட வேண்டியதில்லை. இந்தியாவுக்காக இப்படிபட்ட ஆடுகளம் தயார் செய்ய வேண்டியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *