Cricket, Virat Kohli, India, Sri Lanka, West Indies

இந்தியா இலங்கை இடயேயான 5 போடிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இலங்கையில் உள்ள ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. முன்னதாக இந்திய அணி இல்ங்கையில் நடந்த டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்து 26 வருடங்களுக்கு பின் இலங்கை மண்ணில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இத்தொடரையும் வெல்லும் முனைப்புடன் களம் இறங்கும் . அதே வேலையில்  இல்ங்கை அணியும் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது வென்றால் தான் 2019 உலககோப்பைக்கு நேரடியாக தகுதி பெற முடியும்.

இந்தியா-இலங்கை, ஒரு நாள் போட்டியின் வரலாற்றுப் புள்ளிகள் 1

இலங்கை அணி பார்ப்பதற்கு மிக கம்பீரமான அணியாக தெரிந்தாலும் அவ்வளவு தெளிவான, செயல்படும் அணியாக தெரியவில்லை. சமீபத்தில் ஜீம்பாப்வே அணியுடனான 5 போடிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-2 என்ற வெற்றிக் கணக்கில் தோற்று அதற்கு சான்றாகும். அதன் காரணமாகா இலங்கையின் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடதக்கது. அந்த காயம் ஆறுவதற்குள் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை 26 ஆண்டுகளுக்கு பின்னர் இழந்து அடி வாங்கி வருகிறது.

தற்போது இந்திய மற்றும் இலங்கை இடையே இதுவரை நடந்த போட்டிகளில் யார் அதிகம் வென்றது, யார் அதிகம் ரன் அடித்தது, யார் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியது எனக்காண்போம்.

இந்தியாவும் இலங்கையும் 1972இல் இருந்து இதுவரை 156 ஒரு நாள் போட்டிகளில் எதிரெதிர் சந்தித்துள்ளன.

அவற்றில் இந்திய அணி 83 போட்டிகளையும் இலங்கை அணி 55 போட்டிகளையும் வென்றுள்ளது.

14 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை மற்றும் 3 போட்டி டை யில் முடிந்துள்ளது.

இந்திய அணி தரப்பில் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள் குவித்துள்ளார். அவர் 80 இன்னிங்ஸ் ஆடி 3113 ரன்களை எடுத்துள்ளார். அதில் 8 சதங்களும் 17 அரை சதங்களும் அடங்கும். இரு அணிகளையும் சேர்த்து இவர் தான் அதிக ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரர் ஆட்டம் நாட் அவுட் ரன் அதிக ரன் சராசரி 100 50
டெண்டுல்கர் 80 9 3113 138 43.84 8 17
தோனி 47 12 2149 183* 61.4 2 17
கோலி 40 6 1856 139* 54.58 6 10

 

இலங்கை அணியின் தரப்பில் அதிக ரன்கள் குவித்தவர்கள் :

வீரர் ஆட்டம் நாட் அவுட் ரன் அதிக ரன் சராசரி 100 50
ஜெயசூர்யா 85 5 2899 189 36.23 7 14
சங்ககாரா 71 3 2700 138* 39.7 6 18
ஜெயவர்தனே 84 8 2666 128 35.07 4 17

 

இரு அணிகளையும் சேர்த்து இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் அதிக அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 59 ஆட்டங்களில் 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வீரர் ஆட்டம் விக்கெட் பெஸ்ட் சராசரி
முரளிதரன் 59 74 30/7 31.78
சமிந்தா வாஸ் 60 70 14/5 31.61
ஜெயசூர்யா 69 44 18/4 49.13

 

இந்திய அணியின் தரப்பில் ஓய்வு பெற்ற முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாகிர் கான் 48 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வீரர் ஆட்டம் விக்கெட் பெஸ்ட் சராசரி
சாகிர் கான் 48 66 42/5 32.19
ஹர்பஜன் சிங் 47 61 56/5 26.95
அகர்க்கர் 25 49 44/5 20.61
அஸ்வின் 20 32 32/3 35
(குறிப்பு : அஸ்வின் முதல் 10 வீரர்கள் பட்டியலில் இருக்கிறார். மேலும் முதல் 10ல் உள்ள தற்போதய இந்திய அணியில் இருக்கும் ஒரே வீரர் அஸ்வின் மட்டுமே)

 

அதிக கேட்ச்சுகளை பிடித்தவர் முன்னள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆவார், 56 ஆட்டங்களில் ஆடியுள்ள அவர் 78 ஆட்ட இழப்பை ஏற்ப்படுத்தியுள்ளார். அதில், 59 கேட்ச்சுகளும் 19 ஸ்டெம்பிங்சும் அடங்கும்.

எப்படிப்பபார்த்தாலும் இநதிலும் இந்தியாவின் கையே மேலோங்கி உள்ளது. நாளை ண்டக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் கண்டிப்பாக இந்தியா இலங்கையை துவம்சம் செய்யும் என நம்பலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *