அவரது வெற்றிக்கு அவரது கடின உழைப்பு தான் காரணம் என புகழ்கிறார் விராட் கோலி ! பாருங்கள்: மீண்டும் திரும்பி எழுந்ததற்கு இவர் காரணம் என புகழ்கிறார் கோலி அவர் முக்கிய பகுதியாக இருப்பார்

தென்ஆப்பிரிக்கா தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், பயிற்சி ஆட்டங்கள் இல்லை என்பதால் ரஞ்சி டிராபியில் விளையாட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Cricket, India, Ranji Trophy, Sri Lanka, Ishant Sharma

தென்ஆப்பிரிக்கா தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், பயிற்சி ஆட்டங்கள் இல்லை என்பதால் ரஞ்சி டிராபியில் விளையாட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- இலங்கை இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பின்னர் இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது.

ரஞ்சி டிராபியில் விளையாட இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுமதி 1
Indian cricketer Mohammed Shami (L) unsuccessfully appeals for a Leg Before Wicket (LBW) decision against Sri Lankan cricketer Malinda Pushpakumara during the third day of the third and final Test match between Sri Lanka and India at the Pallekele International Cricket Stadium in Pallekele on August 14, 2017. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

இலங்கைக்கு எதிரான தொடர் வருகிற 24-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின் இந்தியா 27-ந்தேதி நள்ளிரவு தென்ஆப்பிரிக்கா புறப்படுகிறது. 30 மற்றும் 31-ந்தேதி தேதி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாட இருந்தது. தற்போது பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா நேரடியாக டெஸ்டில் விளையாட இருக்கிறது.

இதேவேளையில் வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரு போட்டியில் பெங்கால் – டெல்லியும் (புனே), மற்றொரு ஆட்டத்தில் கர்நாடகா – விதர்பா (நாக்பூர்) அணிகள் மோதுகின்றன.

ரஞ்சி டிராபியில் விளையாட இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுமதி 2
India’s Lokesh Rahul plays a shot during the first day’s play of their third cricket test match against Sri Lanka in Pallekele, Sri Lanka, Saturday, Aug. 12, 2017. (AP Photo/Eranga Jayawardena)

பொதுவாக இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் தொடர் இருக்கும்போது, அதில் இடம்பிடித்துள்ள வீரர்களை உள்ளூர் தொடர்களில் விளையாட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. தற்போது தென்ஆப்பிரிக்கா தொடருக்கான பயிற்சி ஆட்டம் இல்லாததால், இந்த உள்ளூர் தொடர் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், வேகப்பந்து வீச்சாளர்களான இசாந்த் சர்மா, மொகமது ஷமி, உமேஷ் யாதவ் உள்பட சாக, லோகேஷ் ராகுல் ஆகியோர் ரஞ்சி டிராவியில் விளையாட பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

ரஞ்சி டிராபியில் விளையாட இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அனுமதி 3
Sri Lankan cricketer Dimuth Karunaratne (2R) watches as Indian cricketer Ajinkya Rahane (2L) takes a catch to dismiss him as wicketkeeper Wriddhiman Saha (R) looks on during the third day of the third and final Test match between Sri Lanka and India at the Pallekele International Cricket Stadium in Pallekele on August 14, 2017. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

மொகமது ஷமி, சகா கொல்கத்தா அணிக்காகவும், இசாந்த் சர்மா டெல்லி அணிக்காகவும், உமேஷ் யாதவ் விதர்பா அணிக்காகவும், லோகேஷ் ராகுல் கர்நாடகா அணிக்காகவும் விளையாட உள்ளனர். ரஞ்சி டிராபி இறுதிப் போட்டி 29-ந்தேதி இந்தூரில் நடக்கிறது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *