Rohit Sharma (Captain) of India celebrates his fifty with Shikhar Dhawan of India during the 2nd T20I match between India and Bangladesh held at the Saurashtra Cricket Association Stadium, Rajkot on the 7th November 2019. Photo by Deepak Malik / Sportzpics for BCCI

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 29 (21) ரன்கள் எடுத்திருந்த நிலையில், லிடான் தாஸ் ரன் அவுட் ஆனார். முகமது நைம் 36 (31) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் வந்த சவுமியா சர்கார் மற்றும் முகமதுல்லா ஆகியோர் தலா 30 ரன்களை எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

எங்ககிட்ட வாலாட்ட வேண்டாம்... வங்கதேசத்தை வச்சு செய்த ரோஹித் சர்மா! இந்திய அணி அபார வெற்றி! 1
Photo by Deepak Malik / Sportzpics for BCCI

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் முதல் போட்டியில் அடைந்த தோல்வியின் கோபம் ரோகித் ஷர்மாவின் பேட்டிங்கில் தெரிந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வான வேடிக்கை காட்டிய அவர், 23 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

31 (27) ரன்களில் தவான் ஆட்டமிழக்க, 43 ரன்களுக்கு 85 ரன்கள் விளாசிய ரோகித் ஷர்மாவும் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் எளிதாக பேட்டிங் செய்து 15.4 ஓவர்களில் இலக்கை எட்டினர். இதனால் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

100-ஆவது டி20யில் ஆடும் முதல் இந்திய வீரர் ரோஹித் சர்மா:

இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோஹித் சர்மா தனது 100-ஆவது டி20 ஆட்டத்தில் பங்கேற்று சாதனை படைத்தார். ஆடவர் பிரிவில் முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை ரோஹித் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெüருக்கு பின் 100-ஆவது டி20 ஆடும் வீரராக திகழ்கிறார் ரோஹித் சர்மா.

எங்ககிட்ட வாலாட்ட வேண்டாம்... வங்கதேசத்தை வச்சு செய்த ரோஹித் சர்மா! இந்திய அணி அபார வெற்றி! 2
Rohit Sharma (Captain) of India play a shot during the 2nd T20I match between India and Bangladesh held at the Saurashtra Cricket Association Stadium, Rajkot on the 7th November 2019.
Photo by Arjun Singh / Sportzpics for BCCI

ஏற்கெனவே வங்கதேசத்துடன் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் 9 ரன்களை எடுத்த நிலையில் ஒட்டுமொத்தமாக 2452 ரன்களை எடுத்து டி20யில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். ஸ்ட்ரைக் ரேட் 136.67 உடன் நான்கு சதம், 17 அரைசதங்களும் அடித்துள்ளார் ரோஹித்.

நான் இத்தனை ஆட்டங்கள் ஆடுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. எனது கிரிக்கெட் வாழ்வில் நீண்ட பயணமாக உள்ளது. 12 ஆண்டுகளில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தேன். அனுபவத்தின் அடிப்படையில் எனது ஆட்டத்தை புரிந்து கொண்டேன். கடந்த 2007 முதல் டி20 உலகக் கோப்பை போட்டியில் டர்பனில் இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் அறிமுகம் ஆனேன்.  இந்தியாவுக்காக 100-ஆவது டி20 ஆட்டத்தில் ஆடுவதை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என விடியோ பதிவில் கூறியுள்ளார்.



  • SHARE

    விவரம் காண

    மயங் அகர்வாலின் வீக்னெஸ் இதுதான்: போட்டுடைத்த சுனில் கவாஸ்கர்

    கொல்கத்தாவில் வரும் வெள்ளிக்கிழமை முதல் பகலிரவு போட்டியாக வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, இதற்கான பயிற்சியில் இந்திய மற்றும் வங்கதேச...

    இவரை கண்டிப்பாக ஐபிஎல் தொடரில் எடுத்தாக வேண்டும்: வெளிநாட்டு வீரருக்காக வரிந்து கட்டும் யுவராஜ் சிங்க

    அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் புதுவிதமான காட்டடியில் 30 பந்துகளில் 91 ரன்கள் விளாசி சாதனை புரிந்துள்ளார். இதற்கு...

    வீடியோ: இரண்டு கையால் பந்து வீசி, விக்கெட்டும் எடுத்து அசத்திய இளம் வீரர்!

    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் இரண்டு கைகளாலும் பந்து வீசி விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். தென்ஆப்பிரிக்காவில் மான்சி...

    இன்னும் 2 வருசத்துல என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க.. வங்கதேச கேப்டன் எச்சரிக்கை

    தலைசிறந்த அணிகளுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என வங்காளதேச அணி கேப்டன் தெரிவித்துள்ளார். கடைசி ஏழு மாதங்களில் இரண்டு...

    வங்கதேச டெஸ்ட் தொடரை தொடர்ந்து… சக வீரரை அறைந்த பந்துவீச்சாளர் சஸ்பென்ட்! கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை!

    சக வீரரை அடித்த வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்தது. தேசிய கிரிக்கெட் லீக் போட்டி வங்காளதேசத்தில் நடந்து...