இந்திய அணி
ரொம்ப ஆபத்தான ஆளா இருக்காரு… இந்திய அணியின் கேப்டனாவதற்கு சரியான ஆள் இவர் தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக்

ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய டி.20 அணியை வழிநடத்த ஹர்திக் பாண்டியாவே சிறந்தவர் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

இருதரப்பு தொடர், முத்தரப்பு என அனைத்திலும் எதிரணிகளை இலகுவாக வீழ்த்தி கெத்து காட்டும் இந்தியா, ஐசிசி.,யால் நடத்தப்படும் பெரிய தொடர்களில் ஏனோ தொடர்ந்து சொதப்பியே வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் கூட வெற்றியின் அருகில் வரை சென்ற இந்திய அணி, அதன்பிறகு நடைபெறும் பெரிய தொடர்களில் மிக மோசமான தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.

இந்திய அணி

கடந்த வருட டி.20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய அணி, சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும், இந்த வருடத்திற்கான டி.20 உலகக்கோப்பை தொடரில் மிக மோசமான தோல்விகளை சந்தித்தது.

சமகால கிரிக்கெட்டின் வலுவான அணியாக பார்க்கப்படும் இந்திய அணி ஐசிசி., தொடர்களில் தொடர்ந்து சொதப்புவி வருவதற்கான சரியான காரணமே தெரியாததால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர். அதே போல் இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் முன்னாள் வீரர்கள் பலர் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

இந்தியா-நியூசிலாந்து

டி.20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததால் இந்திய அணியின் கேப்டன் பதவியை இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அந்தவகையில், முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியாவும் இந்திய டி.20 அணியை வழிநடத்த ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஹர்திக் பாண்டியாவே சரியானவர் என தெரிவித்துள்ளார்.

ரொம்ப ஆபத்தான ஆளா இருக்காரு... இந்திய அணியின் கேப்டனாவதற்கு சரியான ஆள் இவர் தான்; முன்னாள் வீரர் ஓபன் டாக் !! 1

நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டி.20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை மேற்கோள்காட்டி பேசிய டேனிஷ் கனேரியா, “ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய டி.20 அணியை வழிநடத்த ஹர்திக் பாண்டியாவே சரியானவர். ஹர்திக் பாண்டியா ஆபத்தான கேப்டனை போல் செயல்படுகிறார். பந்துவீச்சாளர்களையும் ஹர்திக் பாண்டியா சரியாக பயன்படுத்துகிறார். இந்திய அணியை வழிநடத்த தேவையான அனைத்து திறமையும் ஹர்திக் பாண்டியாவிடம் உள்ளது” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published.