கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1–2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது. இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவின் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும்.

போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோகித் சர்மா கூட்டணியை நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியவில்லை. இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். அவர்களது பந்துகளை சிக்சர், பவுண்டரி என சிதறடித்தனர்.

இந்திய அணி 16.2 வது ஓவரில் 158 ரன்களை எடுத்து இருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 80 ரன்களில் (52 பந்துக்கள், 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அவுட் ஆனார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.

இதனையடுத்து,ரோகித் சர்மாவுடன், கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். வீராட்டும் இரண்டு சிக்சர்களை விளாசினார். மறுமுனையில் சதம் நோக்கி விளையாடிய ரோகித் சர்மாவும் 80 ரன்களில் அவுட் ஆனார். 18.6 வது ஒவரில் இந்தியா 185 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் பவுல்ட் பந்து வீச்சில் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 55 பந்துக்களை எதிர்க்கொண்ட ரோகித் சர்மா 6 பவுண்டர்கள் மற்றும் 4 சிக்சர்களை அடித்து அசத்தினார். விராட் கோலியுடன் கை கோர்த்த டோனியும் சிக்சருடன் ஆட்டத்தை தொடங்கினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கப்தில் மற்றும் முன்ரோ ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறினர்.

இதனையடுத்து ஆட வந்த கேப்டன் வில்லியம்சன் சிறிது நிலைத்து நின்று ஆட, ஹர்திக் பாண்டியா பிடித்த அருமையான கேட்ச் ஒன்றில் ஆட்டமிழந்தார். பின்னர் களத்திற்கு வந்த புரூஸ் 140 ரன்களிலும், க்ரந்தோம் ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்.

இறுதியில், அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் சஹல், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ததுடன், தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.



  • SHARE

    விவரம் காண

    ஐசிசி டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் அறிவிப்பு: 1 புள்ளி இருந்தால் கோலியால் ஸ்மித் காலி!

    Cricket, India, Steve Smith, Australia
    புணே டெஸ்டில் சிறப்பாக விளையாடிய அஸ்வின், ரஹானே ஆகிய இருவரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்...

    நாங்கள் இருக்கும்வரை இனி இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கிடையாது: ஓப்பனாக பேசும் உமேஷ் யாதவ்

    இந்தியாவில் கிரிக்கெட் திறமைகளுக்குப் பஞ்சமில்லை, ஆனால் இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய வேண்டுமென்றால் ஏற்கெனவே ஆடிக்கொண்டிருப்பவர்களை விட திறமையானவர்களாக இருந்தால்தான் முடியும்...

    இந்த தொடரின் வெற்றிக்கு இவர்தான் காரணம்: உமேஷ் யாதவ் பேட்டி

    Virat Kohli (captain) of India and Umesh Yadav of India celebrates the wicket of Vernon Philander of South Africa during day 4 of the second test match between India and South Africa held at the Maharashtra Cricket Association Stadium in Pune, India on the 13th October 2019 Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
    சிறப்பான கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பா் ரித்திமான் சாஹாவுக்கு வேகப்பந்து வீச்சாளா் உமேஷ் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளாா். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா...

    பிசிசிஐ தலைவரானதும் ஐபிஎல்க்கு முன்னுரிமை கிடையாது, இதற்குத்தான் முன்னுரிமை: சவுரவ் கங்குலி அசத்தல் பேட்டி

    நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை அமுல்படுத்த ஏதுவாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி வினோத் ராய் தலைமையில் 3 நபர்கள் கொண்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவை...

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் வெளியீடு: இந்திய மரணம் மாஸ்!

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி 200 புள்ளிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு...