விராட் கோலியும் நானும் ஒன்னுதான் : சுமித்

இந்தியா ஆஸ்திரேலிய இடயிளான ஒருநாள் தொடர் 17 ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. விராட் கோலியும்

இதையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் சேப்பாக்கத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியதாவது

எனக்கும் விராத் கோலிக்கும் பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை. ஒருநாள் தொடரில் அற்புதான ரெகார்டுகளை வைத்துள்ளார் அவர். மிகவும் ஆபத்தனவ்ர அவர்.

அவரை எங்களால் அமைதியாக வைத்துக்கொள்ள முடியும் என நம்புகிறோம்.

விராட் கோலியும் நானும் ஒன்னுதான் : சுமித் 1

அவ்வாரு செய்யும் பட்சத்தில் இந்த சுற்றுப் பயணட்தில் வெற்றியை எங்களால் ருசிக்க முடியும்.

இந்தியா இலங்கை தொடரை மிகக் கூர்மையாக கவனித்து வருகிறோம். இந்திய அணி மிகச்சிறப்பான ஒருநாள் கிரிக்கெட் விளையாடி வருகிறது.

இந்திய அணியை இந்தியாவில் எதிர் கொள்வது எப்போதும் எங்களுக்கு சவாளானதாகும்.

எங்களது ஒரு நாள் போட்டி அணி வீரர்கள், சமீப காலமாக சுழற்பந்து வீச்சில் மிகச்சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.

அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சை சமாளிப்பதில் இன்னும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம் என்பதை மறுப்பதற்கு இல்லை.

Cricket, David Warner, Josh Hazlewood, Australia, Bangladesh

சவாலான வங்காளதேச தொடரை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்துள்ளோம்.

டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சு அதிகமாக எடுபடும்.

ஆனால் அந்த அளவுக்கு ஒரு நாள் போட்டியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் இருக்காது என்று நினைக்கிறேன். ஆடுகளத்தன்மை எந்த மாதிரி இருக்கும் என்பதை அறிய காத்திருக்கிறோம்.

அதன் பிறகு ஆடுகளம் மற்றும் சூழலுக்கு தகுந்தபடி எங்களை தயார்படுத்திக் கொள்வோம்.

சர்ச்சைகள் இன்றி கிரிக்கெட்டுக்குரிய உத்வேகத்துடன் இந்த தொடரில் விளையாடுவோம். இந்தியாவுக்கு எதிராக மோதுவது எப்போதும் கடினமானது.

உள்ளூரில் அவர்களின் சவாலை சந்திக்க ஆர்வமாக உள்ளோம். ஆஸ்திரேலிய அணி கடைசியாக இந்தியாவில் ஒரு நாள் தொடரில் 2013-ம் ஆண்டில் விளையாடியது.

விராட் கோலியும் நானும் ஒன்னுதான் : சுமித் 2
ADELAIDE, AUSTRALIA – DECEMBER 12: Virat Kohli of India is held back by keeper Wriddhiman Saha as he has words with Steve Smith of Australia after he padded away another ball from Rohit Sharma during day four of the First Test match between Australia and India at Adelaide Oval on December 12, 2014 in Adelaide, Australia. (Photo by Michael Dodge/Getty Images)

அந்த தொடர் மிகப்பெரிய ரன்கள் குவிக்கப்பட்ட தொடராக அமைந்தது. பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களாக இருந்ததால் வீரர்கள் ரன்மழை பொழிந்தனர்.

மீண்டும் அதே போன்ற ஆடுகளங்கள் தான் இந்த தொடருக்கும் தருவார்கள் என்று கருதுகிறேன்.

எங்களது சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஓரிரு ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் அருமையாக செயல்பட்டு வருகிறார்.

இங்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் அவருக்கு உண்டு. அதனால் அவர் எங்கள் அணியில் துருப்பு சீட்டாக இருப்பார் என்று நம்புகிறோம்.

இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

தொடர் முழுவதும் அவர்களை நாங்கள் திறம்பட எதிர்கொள்ள வேண்டியது முக்கியம். விராட் கோலியும்

இந்திய கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த வீரர். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் வியப்புக்குரியவை. இந்த தொடரில் முடிந்தவரை அவரை பெரிய அளவில் ரன் குவிக்க விடாமல் தடுக்க முடியும் என்று நம்புகிறேன். இதை நாங்கள் சரியாக செய்தால் இந்த தொடரை எங்களுக்கு சாதகமாக முடிக்க முடியும்.

இவ்வாறு சுமித் கூறினார். • SHARE
 • விவரம் காண

  கிரிக்கெட் உலகில் தோனி யார்? சாமர்த்தியமாக யோசித்து பதிலளித்த குமார சங்ககாரா!

  இலங்கை கிரிக்கெட் அணி என்றாலே, நம்மாளுங்களுக்கு ஒருவித காண்டு ஏற்படுவதுண்டு. அதே டீமுகிட்ட தோற்றாலும் பாகிஸ்தானிடமோ, இலங்கையிடமோ, வங்கதேசத்திடமோ இந்தியா தோற்றுவிடக் கூடாது...

  கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? பல முட்டல் மோதலுக்குப் பின்னர் அறிவித்த சீனியர் வீரர்! நிம்மிதி பெருமூச்சில் கிரிக்கெட் வாரியம்!

  கொரோனா பிடியில் இருந்து விளையாட்டு உலகம் மெல்ல மீண்டு வருகிறது. போட்டிகளுக்கு தயாராவதற்காக, 55 வீரர்களை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு...

  மெளனராகம் இசையும்!! தோனியின் புதிய டிராக்டரும்! CSK வெளியிட்ட அற்புத வீடியோ

  தோனி டிராக்டர் ஓட்டும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளது கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை....

  அந்த மனுசன் ருத்ரதாண்டவத்த இனிதான் பாக்க போறீங்க..! கொக்கரிக்கும் ரெய்னா!

  தோனி சோர்வடையவில்லை அவர் உடற்தகுதியுடன் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தயாராகவே இருக்கிறார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா...

  வீடியோ: மின்னல் அடிக்கும் போது தன் மகளை பைக்கில் வைத்து சுற்றும் தல தோனி

  தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். ஊரடங்கு காலங்களில் தோனியின் மனைவி ஷாக்‌ஷி, அவரது...