இந்திய அணி ஒரு நாள் போட்டியிலும் நெ.1 ஆக வாய்ப்பு!! 1

இந்தியா ஆஸ்திரேலியத் தொடர் வரும் 17ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் தர வரிசையை மேம்படுத்தும் வித்தத்தில் உள்ளது.

இந்திய அணி ஒரு நாள் போட்டியிலும் நெ.1 ஆக வாய்ப்பு!! 2

119 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணி தற்போது முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் 117 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவும், அதனைத் தொடர்ந்து இந்திய அணி மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்த தொடர் முழுமையாக இரு அணிகளில் யாராவது ஒருவர் கைக்கு போகுமானால் அந்த அணி ஐ.சி.சி யின் ஒருநா தர வரிசைப் பட்டியளில் முதலிடத்தைப் பிடிக்கும்.

கிட்டத் தட்ட இந்த தொடருக்குப் பின் தர வரிசை மாருவது உறுதியாகிவிட்டது.

தொடரின் வெற்றி நிலைமை அடைப்படையில் தர வரிசை மற்றும் புள்ளிகள்

 

  • இந்தியா 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்த, இந்தியா 122, ஆஸ்திரேலியா 113
  • இந்தியா 4-1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்த, இந்தியா 120, ஆஸ்திரேலியா 114
  • இந்தியா 3-2 என ஆஸ்திரேலியாவை வீழ்த்த, இந்தியா 118, ஆஸ்திரேலியா 116
  • ஆஸ்திரேலியா 3-2 என இந்தியாவை வீழ்த்த, ஆஸ்திரேலியா 118, இந்தியா 116
  • ஆஸ்திரேலியா 4-1 என இந்தியாவை வீழ்த்த, ஆஸ்திரேலியா 120, இந்தியா 114
  • ஆஸ்திரேலியா 5-0 என இந்தியாவை வீழ்த்த, ஆஸ்திரேலியா 122, இந்தியா 112

 

எப்படியும் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெறும் படசத்தில் ஒருநால் தரவரிசைப் பட்டியளில் முதலிடத்தைப் பிடிக்கும்.

இந்திய அணி ஒரு நாள் போட்டியிலும் நெ.1 ஆக வாய்ப்பு!! 3

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடயேயான ஒருநாள் போட்டிகளில் சென்னையில் வரும் 17ஆம் தேதி துவங்குகிறது. அதில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி : விராத் கோலி ( கேப்டன்), ரோகித் சர்மா, சிகர் தவான், கே.எல் ராகுல், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜிங்க்யா ராகானே, எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் அப்டேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமர், உமேஷ் யாதவ், முகமது சமி

இதையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் சேப்பாக்கத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அணி ஒரு நாள் போட்டியிலும் நெ.1 ஆக வாய்ப்பு!! 4
(Photo Source: Getty Images)

எங்களது ஒரு நாள் போட்டி அணி வீரர்கள், சமீப காலமாக சுழற்பந்து வீச்சில் மிகச்சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.

அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சை சமாளிப்பதில் இன்னும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம் என்பதை மறுப்பதற்கு இல்லை.

சவாலான வங்காளதேச தொடரை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்துள்ளோம்.

டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சு அதிகமாக எடுபடும்.

ஆனால் அந்த அளவுக்கு ஒரு நாள் போட்டியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் இருக்காது என்று நினைக்கிறேன்.

ஆடுகளத்தன்மை எந்த மாதிரி இருக்கும் என்பதை அறிய காத்திருக்கிறோம்.

அதன் பிறகு ஆடுகளம் மற்றும் சூழலுக்கு தகுந்தபடி எங்களை தயார்படுத்திக் கொள்வோம்.

சர்ச்சைகள் இன்றி கிரிக்கெட்டுக்குரிய உத்வேகத்துடன் இந்த தொடரில் விளையாடுவோம். இந்தியாவுக்கு எதிராக மோதுவது எப்போதும் கடினமானது.

உள்ளூரில் அவர்களின் சவாலை சந்திக்க ஆர்வமாக உள்ளோம். ஆஸ்திரேலிய அணி கடைசியாக இந்தியாவில் ஒரு நாள் தொடரில் 2013-ம் ஆண்டில் விளையாடியது.

அந்த தொடர் மிகப்பெரிய ரன்கள் குவிக்கப்பட்ட தொடராக அமைந்தது. பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களாக இருந்ததால் வீரர்கள் ரன்மழை பொழிந்தனர்.

மீண்டும் அதே போன்ற ஆடுகளங்கள் தான் இந்த தொடருக்கும் தருவார்கள் என்று கருதுகிறேன்.

எங்களது சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஓரிரு ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் அருமையாக செயல்பட்டு வருகிறார்.

இங்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் அவருக்கு உண்டு. அதனால் அவர் எங்கள் அணியில் துருப்பு சீட்டாக இருப்பார் என்று நம்புகிறோம்.

இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

தொடர் முழுவதும் அவர்களை நாங்கள் திறம்பட எதிர்கொள்ள வேண்டியது முக்கியம்.

இந்திய கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த வீரர். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் வியப்புக்குரியவை.

இந்த தொடரில் முடிந்தவரை அவரை பெரிய அளவில் ரன் குவிக்க விடாமல் தடுக்க முடியும் என்று நம்புகிறேன். இதை நாங்கள் சரியாக செய்தால் இந்த தொடரை எங்களுக்கு சாதகமாக முடிக்க முடியும்.

இவ்வாறு சுமித் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *