ஹர்திக் பாண்டியா இல்லாதது பின்னடைவு தான்; ஒப்புக்கொண்ட விராட் கோஹ்லி

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு தான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நாளை துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியது இந்திய அணிக்கு பின்னடைவு தான் என தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் குறித்து விராட் கோஹ்லி பேசியதாவது, ஒரு அணி அது போன்ற ஒன்று நடந்த பிறகு (பால் டேம்பரிங்) முழுதும் எதிர்மறையாக இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. கடந்த காலத்தில் இரு அணிகளும் எல்லைகளை மீறியுள்ளன, அவ்வாறு இனி நடக்காது, ஆனாலும் இது போட்டிநிறைந்த ஒரு விளையாட்டு கடைசியில் இது சர்வதேச கிரிக்கெட் போட்டி,  இதில் போய் பவுலர்கள் வெறுமனே பந்து வீசிவிட்டு மீண்டும் தன் பவுலிங் மார்க் நோக்கிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

சில நேரங்களில் பேட்ஸ்மென்களுக்கு அழுத்தம் கொடுக்க நேரிடும். அதற்காக எல்லை மீறுதல் என்று அர்த்தமில்லை, அவர்கள் மண்டைக்குள் ஏதாவது ஒன்றைப் புகுத்த வேண்டும். இதனை எந்த ஒரு அணியிடமிருந்தும் எதிர்பார்க்கலாம், ஆஸ்திரேலியா அணி மட்டுமல்ல.  ஆகவே ‘அது’ இருக்கவே செய்யும், ஆனல் கடந்த காலத்தைப் போல் இரு அணிகளும் கட்டுப்பாடு இழக்கும் விதமாகப் போகாது.

போட்டி மனப்பான்மை இருக்கவே செய்யும், கடினமான சூழ்நிலையில் பேட்ஸ்மென்களை அவுட் செய்ய வேண்டும் என்ற நெருக்கடி ஏற்படும். எதிரணியில் ஒரு முக்கிய வீரர் ஆடிக்கொண்டிருக்கிறார் என்றால் அவரை நோக்கி நாம் கடினமாகச் செல்ல வேண்டியிருக்கும். அது உடல் மொழியில் இருக்கலாம் அல்லது ஓரிரு வார்த்தைகளில் இருக்கலாம்.  ஆனால் தீவிரமாக எதுவும் நடக்காது என்று நினைக்கிறேன், ஏனெனில் திறமை அளவில் மிகவும் உயர்ந்த தரமுள்ளது. அதனால் அப்படிப் போக வேண்டிய அவசியமிருக்காது, ஆனாலும் சில வேளைகளில் பேட்ஸ்மென் ஒருவரின் ரிதமை நம்மால் கெடுக்க முடியாமல் போகலாம், அப்போது கொஞ்சம் கிண்டல் செய்யலாம் அது ஒரு போதும் தீங்கு ஆகாது” என்று ஸ்லெட்ஜிங் செய்யலாம் என்பது போல் பேசி ஆஸ்திரேலியாவைத் தூண்டி விடுகிறார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.

அதே போல் தான் சிறப்பாக ஆடுவதற்கு உத்வேகமாக மோதல் போக்கைத் தான் ஒரு போதும் நம்புவதில்லை என்றாலும் கடந்த முறை ஸ்டீவ் ஸ்மித் டி.ஆர்.எஸ் கேட்க ஓய்வறையை உதவியை நாடியது போல் சம்பவங்கள் நடந்தால் தான் சும்மாயிருக்க மாட்டேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். • SHARE

  விவரம் காண

  புவனேஷ்வர் பும்ராவை மட்டுமே நாம் நம்பி இருக்கிறோம்: விவிஎஸ் லட்சுமனன்

  புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்களை நாம் மிக அதிகம் நம்பியுள்ளோம். அவர்களை நோக்கியே ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும்...

  ஆசியாவின் ஹாட்டஸ்ட் மென்: டாப்-10ல் விராட் கோலி

  ஆசியாவிலேயே மிகவும் ஹாட்டாக இருக்கும் பிரபலங்களில் விராட் கோலியி முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இந்த...

  மீண்டும் சொதப்பிய ராகுல், விஜய்; சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளிப்பு !!

  ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்த கே.எல் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோரை சமூக வலைதளங்களில்...

  வீடியோ; கே.எல் ராகுலின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஹசீல்வுட் !!

  வீடியோ; கே.எல் ராகுலின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஹசீல்வுட் ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல் ராகுல் வெறும் 2 ரன்னில்...

  வீடியோ; ஒரு ரன் கூட எடுக்காமல் ஸ்டார்க்கிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த முரளி விஜய் !!

  வீடியோ; ஒரு ரன் கூட எடுக்காமல் ஸ்டார்க்கிடம் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த முரளி விஜய் ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரன்...