தோனி சொல்றத அப்படியே கேளுங்க, உங்களுக்கு வெற்றி தான் - கேதர் ஜாதவ் புகழாரம்!! 1

பயிற்சியின் போதும் ஆட்டத்தின் நடுவிலும் தோனி கூறுவதை அப்படியே கேட்டால் போதும் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என புகழுரை சூட்டியுள்ளார் கேதார் ஜாதவ்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம், 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

ஷிகர் தவான் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து இந்திய அணிக்கு மோசமான துவக்கத்தை அளித்தார். அதன்பிறகு, ரோஹித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

தோனி சொல்றத அப்படியே கேளுங்க, உங்களுக்கு வெற்றி தான் - கேதர் ஜாதவ் புகழாரம்!! 2

இதில், ரோஹித் சர்மா விக்கெட்டை பாதுகாத்து சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த கோலி சற்று துரிதமாக ரன் குவித்தார். இதனால், இந்திய அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 44 ரன்கள் எடுத்திருந்த கோலி ஸாம்பா பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா37 ரன்களுக்கும், அம்பதி ராயுடு 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 99 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது.

இந்த நிலையில், தோனியுடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை பாதுகாத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதேசமயம், அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்து வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டையும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

தோனி சொல்றத அப்படியே கேளுங்க, உங்களுக்கு வெற்றி தான் - கேதர் ஜாதவ் புகழாரம்!! 3

இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினர். சிறப்பாக விளையாடிய ஜாதவ் முதலில் அரைசதத்தை கடந்தார். அவரைத் தொடர்ந்து தோனியும் அரைசதத்தை கடந்தார்.

இதன்மூலம், இந்திய அணி 48.2 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 240 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இருஅணிகளுக்கிடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி நாக்பூரில் வரும் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.

முதல் போட்டியில் 81 ரன் அடித்த கேது ஜாதகருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து கேதர் ஜாதவ் பேசியதாவது…

“நான் பேட்ஸ்மேனின் நோக்கத்தை வைத்தே பந்து வீசுகிறேன். எப்போதும் ஸ்டம்புக்கு இடையில் பந்து வீசுவது எனது உற்பத்தியாகும். எனது பொறுப்பினை உணர்ந்து ஒரு பந்து வீச்சாளராக பந்து வீசுகிறேன். ஆஸ்திரேலியாவில் கூட இதுபோன்ற ஒரு சேஸ் சமீபத்தில் செய்தோம். அதனை இன்றும் செய்துள்ளோம். தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன். அவர்  சொல்வதை அப்படியே கேட்டு செயல்படுத்தினால் போதுமானது. நமக்கு வெற்றி நிச்சயம்”

“தோனி மற்றும் கோலி ஆகிய இருவரும் மிகச் சிறந்த சேசர்கள். ஒரு கேப்டனிடம் இருந்து  நீங்கள் இதை தான் கற்றுக்கொள்ள வேண்டும். துவக்கத்தில் அதிக ஷாட் ஆட நினைத்தேன். என்னை தோனி சரியாக வழி நடத்தினார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவருக்கு தெரியும். எப்போதும் வெற்றி பெற நினைக்கிறோம்” என்று கூறினார் கேதர் ஜாதவ்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *