தோனியுடன் பண்ட்டை ஒப்பிடுவது முற்றிலும் தவறு - தவான்!! 1

மொஹாலியில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி 143 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 95 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டையும் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டையும் சாய்த்தனர்.

தோனியுடன் பண்ட்டை ஒப்பிடுவது முற்றிலும் தவறு - தவான்!! 2

ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. டர்னர் 43 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 84 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

தோனியுடன் பண்ட்டை ஒப்பிடுவது முற்றிலும் தவறு - தவான்!! 3

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முக்கிய ஸ்டம்பிங்க் வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம். ஃபீல்டிங்கிலும் நாங்கள் தோல்வியடைந்தோம். நாங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. கடினமாக உழைத்து இன்னும் தீவிரத்துடனும், ஆர்வத்துடனும் வந்து அடுத்த போட்டியை வென்று, தொடரை கைப்பற்ற முயற்சிப்போம்” என்றார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், “சமீபகாலத்தில் இந்தியாவின் மிக கேவலமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் இது. கைக்கு வந்த கேட்சுகளை கோட்டை விட்டனர். இதுப்போன்ற நேரங்களில் தான் ஸ்டம்பிங்கிற்கு தோனியின் அவசியத்தை இந்தியா உணரும். எனினும் பாராட்டியே ஆக வேண்டும், அசத்தலாக ஆடினார் டர்னர்.” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முகமது கைஃபை போலவே ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தாங்கள் தோனியை மிஸ் செய்வதாகவும், தோனி சில சமயங்களில் பேட்டிங்கில் சொதப்பி இருந்தாலும் விக்கெட் கீப்பிங்கில் அவரை போன்று யாராலும் வர முடியாது என்பதை தாங்கள் உணர்ந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்கள் மூலம் பரவலாக பேசி வருகின்றனர்.

தோனியுடன் பண்ட்டை ஒப்பிடுவது முற்றிலும் தவறு - தவான்!! 4

இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணியின் துவக்க வீரர் தவான் பேசுகையில், “ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரரை தோனி போன்ற லெஜெண்டுடன் ஒப்பிடுவது முற்றிலும் சரியானதல்ல. உண்மை தான், அவர் அந்த ஸ்டம்பிங் செய்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். ஆனால், இது போட்டியில் சாதாரணம். அதை அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் சரி செய்வார்” என தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *