தீபக் சாஹர் இல்லை... அர்ஸ்தீப் சிங்கிற்கு மீண்டும் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி !! 1
தீபக் சாஹர் இல்லை… அர்ஸ்தீப் சிங்கிற்கு மீண்டும் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி 3 போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்று, இந்திய அணி டி.20 தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐந்தாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபக் சாஹர் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக அர்ஸ்தீப் சிங் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியும் தனது ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்துள்ளது. க்ரீனிற்கு பதிலாக நாதன் எல்லீஸ் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

யசஸ்வி ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, அக்‌ஷர் பட்டேல், ரவி பிஸ்னோய், ஆவேஸ் கான், முகேஷ் குமார், அர்ஸ்தீப் சிங்.

ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்;

டர்வீஸ் ஹெட், ஜாஸ் பிலிப்ஸ், பென் டக்மெர்ட், ஆரோன் ஹர்தி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட், பென், நாதன் எல்லீஸ், ஜேசன் பெஹண்ட்ரூஃப், தன்வீர் சங்கா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *