சூர்யகுமார் யாதவ், அக்‌ஷர் பட்டேல் தேவையே இல்லை... முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் இந்திய வீரர் !! 1
சூர்யகுமார் யாதவ், அக்‌ஷர் பட்டேல் தேவையே இல்லை… முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் இந்திய வீரர்

முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

சூர்யகுமார் யாதவ், அக்‌ஷர் பட்டேல் தேவையே இல்லை... முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் இந்திய வீரர் !! 2

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரண்டு அணிகள் இடையேயான இந்த தொடர் மீது மிக அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் குறிப்பாக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலும் அசுரபலத்துடன் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, கடந்த 2004ம் ஆண்டில் இருந்து இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் பலர் தற்போது மிக சிறப்பான பார்மில் இருப்பதால், இரு அணிகள் இடையேயான எதிர்வரும் டெஸ்ட் தொடர் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ், அக்‌ஷர் பட்டேல் தேவையே இல்லை... முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் இந்திய வீரர் !! 3

ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரமும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்தே பேசி வருவதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

சூர்யகுமார் யாதவ், அக்‌ஷர் பட்டேல் தேவையே இல்லை... முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் இந்திய வீரர் !! 4

அந்தவகையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர், முதல் டெஸ்ட் போட்டிக்கான அவரது இந்திய அணியின் ஆடும் லெவனையும் தேர்வு செய்துள்ளார்.

தனது அணியின் துவக்க வீரர்களாக கே.எல் ராகுலையும், ரோஹித் சர்மாவையும் தேர்வு செய்துள்ள வாசிம் ஜாபர், மிடில் ஆர்டரில் புஜாரா, விராட் கோலி ஆகியோருடன் சுப்மன் கில்லையும் தேர்வு செய்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூர்யகுமார் யாதவிற்கு வாசிம் ஜாபர் தனது ஆடும் லெவனில் இடம் கொடுக்கவில்லை.

சூர்யகுமார் யாதவ், அக்‌ஷர் பட்டேல் தேவையே இல்லை... முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் இந்திய வீரர் !! 5

விக்கெட் கீப்பராக பாரத்தை தேர்வு செய்துள்ள வாசிம் ஜாபர், இஷான் கிஷனிற்கு தனது ஆடும் லெவனில் இடம் கொடுக்கவில்லை. ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் சவாலாக இருப்பார் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் பலரால் பேசப்பட்ட அக்‌ஷர் பட்டேலை தனது ஆடும் லெவனில் தேர்வு செய்யாத வாசிம் ஜாபர், குல்தீப் யாதவின் பந்துவீச்சில் பல மாற்றங்கள் இருப்பதால், வேறு வழியின்றி தனது ஆடும் லெவனில் அக்‌ஷர் பட்டேலிற்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வு செய்துள்ளதாகவும் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். அதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான வாசிம் ஜாபரின் ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோலி, சுப்மன் கில், கே.எஸ் பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *