கண்டவன் எல்லாம் புஜாரா ஆகிட முடியாது; ஆஸ்திரேலிய வீரரை கிண்டலடித்த ரிஷப் பண்ட்
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்ட்டில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் அபார சதத்தால் 250 ரன்களை சேர்த்தது.
பின்னர் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலயா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோரின் துள்ளியமான பந்து வீச்சை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் திறமையாக எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து கொண்டு வந்தது.

இதனால் 3-வது வீரராக களம் இறங்கிய கவாஜா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். 125 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்தார். முதல் ஓவரிலேயே களம் இறங்கிய அவர், 40-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 40-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை கவாஜா எதிர்கொள்ளும்போது பந்து கையுறையில் (Glove) உரசி ரிஷப் பந்திடம் தஞ்சமடைந்தது. ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இந்தியா ரிவியூ கேட்க, பின்னர் விக்கெட் கொடுக்கப்பட்டது.
கவாஜா கேட்ச் கொடுத்ததும் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், ‘‘இங்கே எல்லோரும் புஜாரா ஆகிவிட முடியாது’’ என்று ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்குப்பின் ஆஸ்திரேலியா எதிரணிகளை விரும்பும் வகையில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் ரிஷப் பந்த் ஸ்லெட்ஜிங்கை தொடங்கி வைத்துள்ளார். வரும் நாட்களில் இரு அணி வீரர்களும் இதுபோன்ற ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட வாய்ப்புள்ளது.