"தோனி சூப்பரா ஃபினிஷ் பண்ண இதான் காரணம்" - ஆஸ்திரேலியா அணியின் துவக்கவீரர் கருத்து 1

இந்திய அணியின் முன்னாள்  கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான தோனி, அற்புதமாக சேஸ் செய்து ஆட்டத்தை முடிக்க காரணம் அவரது இத்தனை ஆண்டுகால அனுபவம் தான் என கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் உஸ்மான் கவாஜா.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது.

இதில், ரோஹித் சர்மா விக்கெட்டை பாதுகாத்து சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த கோலி சற்று துரிதமாக ரன் குவித்தார். இதனால், இந்திய அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 44 ரன்கள் எடுத்திருந்த கோலி ஸாம்பா பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா37 ரன்களுக்கும், அம்பதி ராயுடு 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 99 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது.

"தோனி சூப்பரா ஃபினிஷ் பண்ண இதான் காரணம்" - ஆஸ்திரேலியா அணியின் துவக்கவீரர் கருத்து 2

இந்த நிலையில், தோனியுடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை பாதுகாத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதேசமயம், அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்து வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டையும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினர். சிறப்பாக விளையாடிய ஜாதவ் முதலில் அரைசதத்தை கடந்தார். அவரைத் தொடர்ந்து தோனியும் அரைசதத்தை கடந்தார்.

இதன்மூலம், இந்திய அணி 48.2 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 240 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

"தோனி சூப்பரா ஃபினிஷ் பண்ண இதான் காரணம்" - ஆஸ்திரேலியா அணியின் துவக்கவீரர் கருத்து 3

முதல் போட்டியில் 81 ரன் அடித்த கேது ஜாதகருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த சேசிங்கிற்கு முக்கிய காரணம் தோனி தான். கேதார் ஜாதவ் களத்தில் நின்றாலும் அவருக்கு தக்க நேரத்தில் தனது அனுபவத்தை பகிர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவிடும் தோனி தான்.

கவாஜா கூறியதாவது..

"தோனி சூப்பரா ஃபினிஷ் பண்ண இதான் காரணம்" - ஆஸ்திரேலியா அணியின் துவக்கவீரர் கருத்து 4

“அவர் (டோனி) நன்றாக செயல்படுகிறார், எங்களுக்கு எதிராக கடந்த மூன்று ஆட்டங்களில் அவர் அமைதியான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார். சேசிங் என வந்துவிட்டால் தனது முழு அனுபவத்தையும் வெளிப்படுத்துகிறார். நேர்த்தியாக ஒன்று, இரண்டு ரன்களை அடித்து அடுத்தகட்டத்திற்க்கு எடுத்து செல்கிறார், “என்று கவாஜா கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *