நாளை துவங்கும் முதல் போட்டிக்கான இந்திய அணியை இன்றே அறிவித்தது பி.சி.சி.ஐ

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் இரு அணிகள் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நாளை துவங்குகிறது.

இந்நிலையில் நாளை துவங்க இருக்கும் போட்டியி களம் காண உள்ள இந்திய வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ., இன்றே வெளியிட்டுள்ளது.

பி.சி.சி.ஐ., வெளியிட்டுள்ள 12 வீரர்கள் கொண்ட பட்டியலில், பேட்ஸ்மேன்களுக்கான வரிசையில் ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், முரளி விஜய், விராட் கோஹ்லி, புஜாரா, ரஹானே போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார், ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வினும், அறிமுக வீரர் ஹனுமா விஹாரியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பந்துவீச்சாளர் வரிசையில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் பும்ராஹ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் நாளை துங்கும் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. இருவரில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் யாருக்கு வாய்ப்பு வழங்குகிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி;

விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), கே.எல் ராகுல். முரளி விஜய், சட்டீஸ்வர் புஜார, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திர அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி;

மார்கஸ் ஹரீஸ், ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஸ், பீட்டர் ஹசீல்வுட், டர்வீஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயோன், ஜோஸ் ஹசீல்வுட்.

  • SHARE

  விவரம் காண

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

  அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

  புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...