இந்திய வீரர்களை வழிநடத்தி ஒரு உதாரணமாக திகழ்வார் விராத் கோஹ்லி : ரவி சாஸ்திரி 1
Indian cricket captain Virat Kohli, right and head coach Ravi Shastri address the media ahead of the team’s travel to England and Ireland in New Delhi, India, Friday, June 22, 2018. (Manish Swarup)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி வீரர்களுக்கு ஒரு உதாரணமாக திகழ்ந்து அணியை வழி நடத்துவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 தொடரின் முடிவிற்கு பிறகு, இங்கிலாந்து அணியுடன் இந்தியா டெஸ்ட் தொடரை மேற்கொள்ள இருக்கிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க இருக்கிறது. இதற்காக இரு அணிகளும் மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதற்க்கு முன்பாக 4 நாள்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து நாட்டின் கவுண்டி அணியான எஸ்செக்ஸ் அணியை எதிர்கொண்டது. இடஙக போட்டி இறுதியாக டிராவில் முடிவடைந்தது. இதில் இந்திய அணியின் சார்பாக கோஹ்லி, முரளி விஜய், பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

India vs England: Ravi Shastri Believes Virat Kohli Will Lead by Example in Test Series

2014ம் ஆண்டிலிருந்து இந்திய அணி வெளி கண்டங்களில் ஆடிய 25 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 9 போட்டிகள் மட்டுமே வென்றது. இதில் 5 போட்டிகள் இலங்கை அணியுடனும், 2 போட்டிகள் 2016ம் ஆண்டு வேஸ்ட் இண்டீஸ் அணியுடனும் வென்றது.

இதிலும் தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோற்றது. முதல் இரண்டு போட்டிகளில் மோசமாக ஆடிய பிறகு, 3 போட்டியில் நிதானித்து வென்றது.

இந்திய வீரர்களை வழிநடத்தி ஒரு உதாரணமாக திகழ்வார் விராத் கோஹ்லி : ரவி சாஸ்திரி 2
India’s national cricket team head coach Ravi Shastri look on during a training session at Supersport Park cricket ground on January 12, 2018 in Centurion, South Africa. / AFP PHOTO / Phill Magakoe (Photo credit should read PHILL MAGAKOE/AFP/Getty Images)

இந்த மோசமான வெளிப்பாடு குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “இந்த தொடர் எங்களுக்கு வெளி கண்டங்களில் சிறப்பாக செயப்படுவோம் என்பதை வெளிப்படுத்த ஒரு சவாலாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 அணி என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம். அதை இங்கும் செய்வோம்” என்றார்.

இந்த தொடருக்கு முன்பாக 4-0 என 2011 ம் ஆண்டும், 1-3 என்ற கணக்கில் 2014ம் ஆண்டும் இரு அணிகளும் மாறி மாறி வென்றிருக்கின்றன. இதனால் எந்த அணியும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்திய வீரர்களை வழிநடத்தி ஒரு உதாரணமாக திகழ்வார் விராத் கோஹ்லி : ரவி சாஸ்திரி 3
Indian cricket captain Virat Kohli, right and head coach Ravi Shastri address the media ahead of the team’s travel to England and Ireland in New Delhi, India, Friday, June 22, 2018. (Manish Swarup)

இந்த தொடரில் கோஹ்லி சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். அணைத்து வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்து அணியை வழிநடத்தி தொடரை வென்று தருவார் எனவும் நம்பிக்கை உண்டு என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *