இவர் இருக்கும் போது கே.எல் ராகுலுக்கு என்ன வேலை...? அடுத்த கேப்டன் இவர் தான்; முன்னாள் வீரர் உறுதி !! 1

ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய டி.20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

கடந்த வருட ஐபிஎல் தொடர் ஐபிஎல் தொடர் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்த ஹர்திக் பாண்டியா, கடந்த வருட ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாததால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாவால் பழையபடி பந்துவீச முடியாததால் கடந்த வருடம் இந்திய அணியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா ஓரங்கட்டப்பட்டார்.

இவர் இருக்கும் போது கே.எல் ராகுலுக்கு என்ன வேலை...? அடுத்த கேப்டன் இவர் தான்; முன்னாள் வீரர் உறுதி !! 2

இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பிறகு தானாக முன்வந்து அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தற்காலிக ஓய்வை அறிவித்திருந்த ஹர்தின் பாண்டியா, தனது விளையாட்டில் முழு கவனத்தையும் செலுத்தி மீண்டும் பழைய ஹர்திக் பாண்டியாவாக மீண்டு வந்தார். இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மிக சிறப்பாக செயல்பட்டு குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியிலும் மீண்டும் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்டியா, இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இருக்கும் போது கே.எல் ராகுலுக்கு என்ன வேலை...? அடுத்த கேப்டன் இவர் தான்; முன்னாள் வீரர் உறுதி !! 3

சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் உலகின் ஹாட் டாப்பிக்காக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியாவை முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக்கும் தன் பங்கிற்கு ஹர்திக் பாண்டியாவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இவர் இருக்கும் போது கே.எல் ராகுலுக்கு என்ன வேலை...? அடுத்த கேப்டன் இவர் தான்; முன்னாள் வீரர் உறுதி !! 4

ஹர்திக் பாண்டியா குறித்து பிராட் ஹாக் பேசுகையில், “ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒரு ஆல் ரவுண்டராக தனது வேலையை ஹர்திக் பாண்டியா தொடர்ந்து சிறப்பாகவே செய்து வருகிறார். என்னை பொறுத்தவரையில் சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர் (டி.20 போட்டிகளில் மட்டும்) என்றால் அது ஹர்திக் பாண்டியா தான், ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கூடுதல் பலம் சேர்த்து வருகிறார். ரோஹித் சர்மாவிற்கு அடுத்தபடியாக இந்திய டி.20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் மிக அதிகம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.