கடைசி டி.20 போட்டி; முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து !! 1
India's Krunal Pandya (L) celebrates the wicket of New Zealand's Daryl Mitchell (R) during the second Twenty20 international cricket match between New Zealand and India in Auckland on February 8, 2019. (Photo by MICHAEL BRADLEY / AFP) (Photo credit should read MICHAEL BRADLEY/AFP/Getty Images)

கடைசி டி.20 போட்டி; முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.

ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில், யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளார். மற்றபடி கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் களம் காண்கின்றனர்.

அதே போல் நியூசிலாந்து அணியிலும் பிளயர் திக்னர் என்னும் இளம் வீரர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்

மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட், விஜய் சங்கர், தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது.

மூன்றாவது டி.20 போட்டிக்கான நியூசிலாந்து அணி;

டிம் செய்பர்ட், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன், டரில் மிட்செல், ராஸ் டெய்லர், காலின் டி  கிராண்ட்ஹோம், மிட்செல் சாட்னர், ஸ்காட் குஜ்ஜிலின், டிம் சவுத்தி, இஷ் சோதி, பிளைர் திக்னர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *