வீடியோ; ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மனதையும் வென்ற தோனி !! 1

வீடியோ; ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மனதையும் வென்ற தோனி

நியூசிலாந்து அணியுடனான இன்றைய போட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க ஜோடியான முன்ரோ – சேஃபெர்ட்டின் அதிரடியான தொடக்கம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோமின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 212 ரன்களை குவித்தது.

வீடியோ; ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மனதையும் வென்ற தோனி !! 2

213 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு களத்திற்கு வந்த விஜய் சங்கர், அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர், அதேநேரத்தில் அடித்து ஆடவும் தவறவில்லை. 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 43 ரன்களை குவித்து சாண்ட்னெரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட்  ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது.

வீடியோ; ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மனதையும் வென்ற தோனி !! 3

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது

இந்த போட்டியில் இந்திய அணி பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த போது, தடைகளை தாண்டி கையில் இந்திய தேசிய கொடியுடன் திடீரென மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர் நேராக தோனியை நோக்கி ஓடிவந்து தோனியின் காலில் விழுந்தார், அந்த ரசிகர் வைத்திருக்கும் தேசிய கொடி தனது காலிற்கு கீழ் செல்வதை விரும்பாத தோனி, உடனடியாக தேசிய கொடியை அந்த ரசிகரின் கையில் இருந்து பறித்துவிட்டார்.

https://twitter.com/premchoprafan/status/1094535915320553472

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தோனியின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *