மிக முக்கியமான இளம் வீரர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து அணி !! 1
மிக முக்கியமான இளம் வீரர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து அணி

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

மிக முக்கியமான இளம் வீரர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து அணி !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெறது.

லக்னோ மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மிக முக்கியமான இளம் வீரர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து அணி !! 3

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இருந்து உம்ரன் மாலிக் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர ஆடும் லெவனில் வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை.

கடந்த போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, இரண்டாவது போட்டிக்கான ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது.

மிக முக்கியமான இளம் வீரர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது நியூசிலாந்து அணி !! 4

இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்;

சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங்.

நியூசிலாந்து அணியின் ஆடும் லெவன்;

பின் ஆலன், டீவன் கான்வே, மார்க் சாப்மன், கிளன் பிலிப்ஸ், டேரியல் மிட்செல், மைக்கெல் பிரேஸ்வெல், மிட்செல் சாட்னர், இஷ் சோதி, ஜேகப் டஃபி, லோகி பெர்குசன், பிலையர் திக்னர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *