அணியில் இரண்டு அதிரடி மாற்றம்… முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான இந்திய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு இந்த போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு உம்ரன் மாலிக் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி தனது ஆடும் லெவனில் ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. ஹென்ரி சிப்லே ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு டக் பிரேஸ்வெல் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உம்ரன் மாலிக்.
நியூசிலாந்து அணியின் ஆடும் லெவன்;
பின் ஆலன், டீவன் கான்வே, ஹென்ரி நிக்கோலஸ், டேரியல் மிட்செல், டாம் லதாம், கிளன் பிலிபிஸ், மைக்கெல் பிரேஸ்வெல், மிட்செல் சாட்னர், லோகி பெர்குசன், ஜேகப் டஃபே, பிலையர் திக்னர்.