நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக முகமது சிராஜிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சவுதாம்டன் மைதானத்தில் வரும் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காகவும், அதன்பின் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரமாக பயிற்சியும் எடுத்து வருகின்றனர். அதே போல் மறுபுறம் கிட்டத்தட்ட டி.20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இணையாக பார்க்கப்படும் இந்த இறுதி போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இஷாந்த் சர்மா தேவை இல்ல… இந்த பையன எடுங்க மிரட்டுவான்; அட்வைஸ் கொடுத்த ஹர்பஜன் சிங் !! 2

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர், அதே போல் இறுதி போட்டிக்கான தங்களது ஆடும் லெவனையும், கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இறுதி போட்டிக்கான இந்திய அணியில் விளையாடப்போகும் வீரர்கள் யார் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகிய இருவரில் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இஷாந்த் சர்மா தேவை இல்ல… இந்த பையன எடுங்க மிரட்டுவான்; அட்வைஸ் கொடுத்த ஹர்பஜன் சிங் !! 3

முன்னாள் வீரர்கள் பலர் முகமது சிராஜிற்கே இடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியும் முகமது சிராஜை ஆடும் லெவனில் இணைக்க தேவையானவற்றை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக முகமது சிராஜிற்கே அணியில் இடம் கொடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இஷாந்த் சர்மா தேவை இல்ல… இந்த பையன எடுங்க மிரட்டுவான்; அட்வைஸ் கொடுத்த ஹர்பஜன் சிங் !! 4

இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்திருந்தால் மூன்று தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கே அணியில் இடம் கொடுப்பேன். அதனடிப்படையில் ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகம்து ஷமி ஆகியோரை அணியில் இருந்து நீக்கவே முடியாது, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக முகமது சிராஜிற்கே அணியில் இடம் கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *