சீனியர் வேகப்பந்து வீச்சாளர் அதிரடி நீக்கம்; மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !! 1

சீனியர் வேகப்பந்து வீச்சாளர் அதிரடி நீக்கம்; மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி.20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில், இரண்டு போட்டியிலும் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.

சீனியர் வேகப்பந்து வீச்சாளர் அதிரடி நீக்கம்; மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !! 2

ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை தட்டி தூக்கும் என்பதால் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றாக கட்டாயத்தில் உள்ளது.

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இன்றைய போட்டியில் நிச்சயம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்திய அணியை பொறுத்தரவரையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்க வாய்ப்புகள் இல்லை. ஒரு வேளை பந்துவீச்சில் இன்னும் பலம் தேவை என விராட் கோஹ்லி கருதினால் ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி இன்றைய போட்டியில் களமிறங்கலாம்.

சீனியர் வேகப்பந்து வீச்சாளர் அதிரடி நீக்கம்; மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !! 3

நியூசிலாந்து அணியிலும் பெரிதாக மாற்றம் செய்ய வாய்ப்புகள் இல்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் கடுமையாக சொதப்பிய நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் பழி தீர்த்து தொடரை தக்க வைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும்.

இரு அணிகள் இடையேயான இன்றைய போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணியளவில் ஒளிபரப்பாகும்.

இன்றைய போட்டிக்கான உத்தேச இந்திய அணி;

கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஸ்ரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஷிவம் துபே, நவ்தீப் சைனி/ ஷர்துல் தாகூர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *