புதிய மைல்கல்லை எட்டிய தல தோனி

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டி.20 போட்டியின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க ஜோடியான முன்ரோ – சேஃபெர்ட்டின் அதிரடியான தொடக்கம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோமின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 212 ரன்களை குவித்தது.

213 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு களத்திற்கு வந்த விஜய் சங்கர், அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர், அதேநேரத்தில் அடித்து ஆடவும் தவறவில்லை. 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 43 ரன்களை குவித்து சாண்ட்னெரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட்  ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

 

இந்திய அணி இந்த போட்டியில் தோவ்லியடைந்திருந்தாலும் இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இன்றைய டி.20 போட்டியின் மூலம் தனது 300வது டி.20 போட்டியை நிறைவு செய்த தோனி, இந்திய அணிக்காக 300 டி.20 போட்டிகள் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்திய அணிக்காக அதிக டி.20 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியல்;

தோனி – 300* போட்டிகள்

ரோஹித் சர்மா – 298 போட்டிகள்

சுரேஷ் ரெய்னா – 296 போட்டிகள்

தினேஷ் கார்த்திக் – 260 போட்டிகள்



  • SHARE

    விவரம் காண

    இந்திய அணியின் துவக்க வீரருக்கு காயம்; கவலையில் ரசிகர்கள் !!

    இந்திய அணியின் துவக்க வீரருக்கு காயம்; கவலையில் ரசிகர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வலை பயிற்சியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர்...

    ஒரே ஒவரில் 5 பவுண்டரி! பாக். வீரரை அடித்து துவம்சம் செய்த ஆப்கன் இளம் வீரர்!

    Afghanistan's Hazratullah Zazai (L) waves away bowler Pakistan's Shaheen Shah Afridi after hitting another shot for four runs during the 2019 Cricket World Cup warm up match between Pakistan and Afghanistan at Bristol County Ground in Bristol, southwest England, on May 24, 2019. (Photo by Glyn KIRK / AFP) (Photo credit should read GLYN KIRK/AFP/Getty Images)
    ஆப்கான் அணியில் இந்த உலகக்கோப்பையில் பவுலர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒரு தொடக்க வீரர் இருக்கிறார், அவர்தான் ஹஸ்ரதுல்லா சஸாய். இவர் முன்பு ஒருமுறை...

    கவலைப்படாதீங்க கோஹ்லி மாஸ் பண்ணிடலாம்; நம்பிக்கை கொடுக்கும் ரோஹித் சர்மா !!

    கவலைப்படாதீங்க கோஹ்லி மாஸ் பண்ணிடலாம்; நம்பிக்கை கொடுக்கும் ரோஹித் சர்மா உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நம்பிக்கை வார்த்தைகளை...

    பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் காயம்: ரசிகர்கள் கவலை!

    உலகக்கோப்பைத் தொடருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு காயம்...

    ‘எப்பிடி இருந்த நான்.. இப்பிடி ஆய்ட்டேன்’ ஹர்திக் பாண்டியா வெளியிட்ட ‘அன்றும்,இன்றும்’ புகைப்படம்!

    தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஹர்திக் பாண்ட்யா தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம்...