இந்த மூன்று பேர எப்படி சமாளிக்க போறோம்னு தான் தெரியல; நியூசிலாந்து பயிற்சியாளர் ஓபன் டாக் !! 1

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது நியூசிலாந்து வீரர்களுக்கு நிச்சயம் கடும் சவாலாக இருக்கும் என நியூசிலாந்து அணியின் பயிற்சியாளரான கிரே ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி துவங்க உள்ளது.

இந்த மூன்று பேர எப்படி சமாளிக்க போறோம்னு தான் தெரியல; நியூசிலாந்து பயிற்சியாளர் ஓபன் டாக் !! 2

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இரு அணிகள் இடையேயான முதல் போட்டி துவங்க இன்னும் இரு தினங்களே உள்ளதால், இரு அணி வீரர்களும் இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதே போல் சவால் நிறைந்த இந்த தொடருக்கான தங்களது எதிர்பார்ப்புகளையும் இரு அணியின் சீனியர் வீரர்களும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த மூன்று பேர எப்படி சமாளிக்க போறோம்னு தான் தெரியல; நியூசிலாந்து பயிற்சியாளர் ஓபன் டாக் !! 3

அந்தவகையில், இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளரான க்ரே ஸ்டெட், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது நியூசிலாந்து வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று பேர எப்படி சமாளிக்க போறோம்னு தான் தெரியல; நியூசிலாந்து பயிற்சியாளர் ஓபன் டாக் !! 4

இது குறித்து க்ரே ஸ்டெட் பேசுகையில், “இந்திய மண்ணில் அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிப்பது எளிதல்ல. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள். அவர்களை சமாளிப்பது நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். ஆடுகளத்தின் தன்மையையும், போட்டியின் தன்மையையும் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாடுவதே நியூசிலாந்து அணிக்கு கை கொடுக்கும்” என்று தெரிவித்தார் .

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி;

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), புஜாரா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *