நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் முடிந்து அந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற வெற்றிக்கணக்கில் கோப்பையைக் கைப்பற்றியது.
டி20 தொடரின் முதல் போட்டியை இந்தியாவும் இரண்டாவது போட்டியை நியூசிலாந்து அணியும் வென்றுள்ளது. மூன்றாவது போட்டி நாளை இரவு 7 மணிக்கு கேரளாவின் திருவனந்தபுரம் க்ரீன் ஃபீல்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த க்ரீன்ஃபீல்டு மைதானம் முதன்முதலாக சர்வதேச போட்டி நடக்கவுள்ளது. மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் இந்தியாவின் 50ஆவது மைதானம் ஆகும்.
தற்போது இந்தியாவின் சிறந்த லெவனைப் பார்ப்போம்
1.ரோஹித் சர்மா
இந்திய அணியின் தொடக்கவீரர் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 147 ரன் அடித்த ரோகித் சர்மா, முதல் டி20 போட்டியில் 80 ரன் அடித்து அசத்தினார்.
2.ஷிகர் தவான்
இந்திய அணியின் இடது கை தொடக்கவீரர் ஷிகர் தவான் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 52 பந்தில் 80 ரன் அடித்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
3.விராட் கோலி
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான். நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 200-ரன்னை கடக்க 11 பந்தில் 26 அடித்து உதவி செய்தார். இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக அரை சதம் அடித்தும் இந்திய அணியை கரை சேர்க்க இயலவில்லை.
4.ஷ்ரேயஸ் ஐயர்
மும்பை அணியின் நட்சத்திர வீரர் ஷ்ரேயஸ் ஐயர் முதல் டி20 போட்டியில் அறிமுகமானார் ஆனால் பேட்டிங் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், இரண்டாவது போட்டியிலும் அவருக்கு இடம் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அதிரடியான ஷாட்டுகளை ஆடினார். இருந்தும் இந்திய அணியை வெற்றிப்பதைக்கு அழைத்துச் செல்ல இயலவில்லை.
5.எம்.ஸ். தோனி
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்தார் தோனி, ஆனால் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து வாணவேடிக்கை காட்டினார். பின்னர் இரண்டாவது போட்டியில் அதிரடியாக ஆடி 49 ரன்கள் சேர்த்தாலும் அணியை கரை சேர்க்க இயலவில்லை.
6.ஹர்திக் பாண்டியா
3வது இடத்தில் இந்திய அணிக்காக விளையாடிய ஹர்டிக் பாண்டியா, 2 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகிவிட்ட பெவிலியன் சென்றார். ஆனால், பீல்டிங்கின் போது குப்தில் மற்றும் வில்லியம்சன் ஆகியோரின் கேட்சை பிடித்து அசத்தினார். இரண்டாபது போட்டியில் வந்தவுடன் சரியாக பந்தை கணிக்காத பாண்டியா சோதி பந்தில் போல்ட் ஆனார்.
7.அக்சர் பட்டேல்
முதல் டி20 போட்டியில் 4 ஓவரில் 20 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை அக்சர் பட்டேல் எடுத்ததால், இந்த போட்டியிலும் இவருக்கு பதில் குல்தீப் யாதவ் வெளியே தான் இருக்கவேண்டும்.
8.புவனேஸ்வர் குமார்
‘கிங் ஆப் ஸ்விங்’ என்று அழைக்க படும் புவனேஸ்வர் குமார், முதல் போட்டியில் 3 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து அதிரடி ஆட்டக்காரர் கோலின் முன்றோவின் விக்கெட்டை எடுத்து அசத்தினார். இரண்டாவது போட்டியில் இவரது பந்து வீச்சு கணிசமான ரன்னிற்கு பறந்தாலும், இறுதியில் தனது டெத் ஓவர் திறமையால் சற்று கட்டுப்படுத்தினார்.
9.யுஜவெந்திர சஹால்
சிறப்பாக பந்து வீசி வரும் சஹால், முதல் போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே பயங்கரமான வீரர் குப்தில் விக்கெட்டை எடுத்து, 4 ஓவர் முடிவில் 26 ரன் விட்டு கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.
10.ஜஸ்பிரிட் பும்ரா
முதல் டி20 போட்டியில் 4 ஓவர்கள் வீசி 37 ரன் அள்ளிக்கொடுத்து விக்கெட் எடுக்காமல் ஏமாற்றி விட்டார் பும்ரா. இரண்டாவது போட்டியில் அனைத்து பந்து வீச்சாளர்களின் பந்துகளும் பறக்கவிடப்பட இவர் மந்தமான அந்த ராஜ்கோட் பிட்சில் 4 ஓவர்கள் வீசி 23 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
11.முகமது சிராஜ்
இந்திய அணி ஐந்து முக்கிய பந்துவீச்சாளர்களை எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு பெற்று விட்டார். இதனால், இவருக்கு பதிலாக இந்திய அணியில் சிராஜ் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வாய்ப்பை சரியாக பயனபடுத்திகொள்ளாத சிராஜ் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட் மட்டுமே எடுத்து 53 ரன் வாரி வழங்கினார். இந்த போட்டியில் இவர் இடம் பெற்று அற்புதமாக பந்து வீசுவார் என நம்புவோம்.