உங்க படம் அவுங்ககிட்ட ஓடாது... இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்த அணியே வெற்றி பெறும்; முன்னாள் வீரர் ஆரூடம் !! 1

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி துவங்க உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் இந்திய அணி, ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

உங்க படம் அவுங்ககிட்ட ஓடாது... இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்த அணியே வெற்றி பெறும்; முன்னாள் வீரர் ஆரூடம் !! 2

ஆசிய கோப்பை தொடரின் மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போருக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி படுதோல்வியடைந்ததால், இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை எப்படி சமாளிக்கும் என்பதும் இந்த போட்டி மீதான அதிக எதிர்பார்பிற்கு காரணம். பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இந்த போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

உங்க படம் அவுங்ககிட்ட ஓடாது... இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்த அணியே வெற்றி பெறும்; முன்னாள் வீரர் ஆரூடம் !! 3

அந்தவகையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தும், அதில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்தும் பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து டேனிஷ் கனேரியா பேசுகையில், “இரு அணிகளிலுமே சில முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர், இது இரு அணிகளுக்குமே பிரச்சனை தான். தற்போதைய சூழ்நிலையை வைத்து பார்க்கும் பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 60 சதவீத வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் இந்திய அணியின் பந்துவீச்சு, பாகிஸ்தானை விட பலமானதாக உள்ளத. பந்துவீச்சில் இந்திய அணியின் பலத்தை வைத்தே இந்திய அணிக்கு 60 சதவீத வெற்றி வாய்ப்பு இருப்பதாக நான் கூறுகிறேன். இந்திய அணியில் ரவிச்சந்திர அஸ்வின், ரவி பிஸ்னோய், ஜடேஜா மற்றும் சாஹல் ஆகியோர் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதே போல் அர்ஸ்தீப் சிங்,புவனேஷ்வர் குமார் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் குறை சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வருகின்றனர், ஆனால் பாகிஸ்தான் அணியை எடுத்து கொண்டால் ஷாகின் அப்ரிடி என்ற ஒருவரை மட்டுமே நம்பி உள்ளது. ஷாகின் அப்ரிடி என்ற ஒருவர் இல்லாவிட்டால் பாகிஸ்தான் அணி என்ன செய்யும், அவரது இடத்தை யாரை வைத்து சரி செய்யும் என தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.