யாருமே செய்யாத சாதனை... தென் ஆப்ரிக்கா தொடர் மூலம் புதிய சரித்திரம் படைத்த புவனேஷ்வர் குமார் !! 1

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் மூலம் ஜாகிர் கானின் சாதனையை புவனேஸ்வர் குமார் முறியடித்துள்ளார்

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

யாருமே செய்யாத சாதனை... தென் ஆப்ரிக்கா தொடர் மூலம் புதிய சரித்திரம் படைத்த புவனேஷ்வர் குமார் !! 2

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியிலும் டாஸை வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி, கடந்த நான்கு போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பந்துவீச்சை தேர்வு செய்தது.

யாருமே செய்யாத சாதனை... தென் ஆப்ரிக்கா தொடர் மூலம் புதிய சரித்திரம் படைத்த புவனேஷ்வர் குமார் !! 3

இந்த தொடரில் வழக்கம்போல் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3.3 ஓவரில் 28/2ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது, மழை நின்றபின் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மழை விடாததால் போட்டி ரத்து செய்யப்பட்டது,இதன் காரணமாக இந்த தொடர் 2-2 என சமன் செய்யப்பட்டது.

 

மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த தொடரின் 4 போட்டிகளில் பங்கேற்று 6 விக்கெட்களை வீழ்த்திய புவனேஸ்வர் குமார் பிளேயர் ஆப் தி சீரியஸ்(PLAYER OF THE SERIES) பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

 

மேலும் இந்த மேன் ஆப் தி சீரியஸ் பட்டம் பெற்றதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாகிர் கானின் சாதனையை புவனேஸ்வர் குமார் முறியடித்துள்ளார்..

 

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10 வருடம் அனுபவம் படைத்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அதிகமுறை மேன் ஆப் தி சீரியஸ் பட்டம்(4 முறை) வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இரண்டாவது இடத்தில் ஜாகீர்கான் மூன்றாவது இடத்தில் இஷாந்த் சர்மாவும்(3 முறை) இடம்பெற்றுள்ளனர்.

யாருமே செய்யாத சாதனை... தென் ஆப்ரிக்கா தொடர் மூலம் புதிய சரித்திரம் படைத்த புவனேஷ்வர் குமார் !! 4

ஹர்ஷல் பட்டேல் இந்தத் தொடரில் புவனேஸ்வர் குமாரை விட அதிக விக்கெட் வீழ்த்திய போதும், இக்கட்டான நேரத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 14 ஓவர்கள் வீசி வெறும் 85 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்திய புவனேஷ்வர் குமாருக்கு இந்த பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published.