கடைசி போட்டியிலும் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி; முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா !! 1

இந்திய அணியுடனான கடைசி டி.20 போட்டியிலும் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.

கடைசி போட்டியிலும் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி; முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா !! 2

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியிலும் டாஸை வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி, கடந்த நான்கு போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணி கடந்த நான்கு போட்டிகளை போலவே எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

கடைசி போட்டியிலும் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி; முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா !! 3

அதே வேளையில், இந்த போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் காயமடைந்த தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா இந்த போட்டியில் விளையாடாததால் கேசவ் மஹராஜ் இந்த போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெம்பா பவுமாவிற்கு பதிலாக ஸ்டப்ஸ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், அதே போல் மார்கோ ஜென்சன் மற்றும் தப்ரைஸ் சம்சி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரீசா ஹென்ரிக்ஸ் மற்றும் ரபாடா ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், ஹர்சல் பட்டேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஸ் கான்.

தென் ஆப்ரிக்கா அணியின் ஆடும் லெவன்;

டி காக், ரீசா ஹென்ரிக்ஸ், ராசி வாண்டர் டூசன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், ஸ்டப்ஸ், டூவைன் ப்ரெடோரியஸ், ராபாடா, கேசவ் மஹராஜ், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்கியா.

Leave a comment

Your email address will not be published.