முதல் இந்திய வீரர் என்ற பெருமை... டி.20 போட்டிகளில் புதிய சரித்திரம் படைத்த “கிங்” கோலி !! 1

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

முதல் இந்திய வீரர் என்ற பெருமை... டி.20 போட்டிகளில் புதிய சரித்திரம் படைத்த “கிங்” கோலி !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், கே.எல் ராகுல் 57 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி 49 ரன்களும் எடுத்தனர்.

முதல் இந்திய வீரர் என்ற பெருமை... டி.20 போட்டிகளில் புதிய சரித்திரம் படைத்த “கிங்” கோலி !! 3

இதன்பின் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு 2 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்கரம் 33 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் மில்லர் – குவிண்டன் டி காக் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. கடைசி ஓவர் வரை இந்திய அணிக்கு பயம் காட்டிய டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார்.

முதல் இந்திய வீரர் என்ற பெருமை... டி.20 போட்டிகளில் புதிய சரித்திரம் படைத்த “கிங்” கோலி !! 4

இறுதி வரை ஆட்டமிழக்காமல் டேவிட் மில்லர் 106 ரன்களும், டேவிட் மில்லர் 48 பந்துகளில் 69 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், பவர்ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்த தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

முதல் இந்திய வீரர் என்ற பெருமை... டி.20 போட்டிகளில் புதிய சரித்திரம் படைத்த “கிங்” கோலி !! 5

இந்தநிலையில், இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்கள் எடுத்த விராட் கோலி, இதன் மூலம் டி.20 போட்டிகளில் 11,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 11,000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

டி.20 போட்டிகளில் 11,000+ ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்;

கிரிஸ் கெய்ல் – 14,562 ரன்கள் – 463 போட்டிகள்
பொலார்ட் – 11,915 ரன்கள் – 614 போட்டிகள்
சோயிப் மாலிக் – 11,902 ரன்கள் – 481 போட்டிகள்
விராட் கோலி – 11,030 ரன்கள் – 354 போட்டிகள்
டேவிட் வார்னர் – 10,870 ரன்கள் – 328 போட்டிகள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *