Cricket, India, New Zealand, Ashish Nehra, Retirement

இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா நவம்பர் 1ஆம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் நியூஸிலாந்து அணியுடன் முதல் டி20 போட்டி முடிந்தவுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டெல்லியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், வர்ணனை செய்ய வருகிறார் ஆஷிஷ் நெஹ்ரா.

நவம்பர் 16ஆம் தேதி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியின் போது முதல் முறையாக வர்ணனை பெட்டியில் உட்கார போகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா. ஆஷிஷ் நெஹ்ரா டெத் ஓவரில் சிறப்பாக வீசுவார் என்று நாம் அனைவருக்குமே தெரியும்.

ஓய்வு பெற்றதற்கு பிறகு தான் வர்ணனை செய்ய போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்தார் ஆஷிஷ் நெஹ்ரா.

இந்தியா vs இலங்கை 2017: வர்ணனை செய்ய வருகிறார் 'ஆண்டவர் நெஹ்ரா' 1
DURBAN – FEBRUARY 26: Ashish Nehra of India celebrates the wicket of Alec Stewart of England during the ICC Cricket World Cup 2003, Pool A match between England and India held on February 26, 2003 at Kingsmead in Durban, South Africa. India won the match by 82 runs. (Photo by Tom Shaw/Getty Images)

“இப்போதைக்கு நான் பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. என் குடும்பத்துடன் நான் சிறிது நாள் கழிக்கவேண்டும். ஆனால், மீண்டும் கிரிக்கெட் சம்மந்தமாக நான் ஏதாவது செய்வேன். ஏனென்றால், கடந்த 25 வருடத்தில் எனக்கு தெரிந்தது கிரிக்கெட் மட்டும் தான். அது பயிற்சியாளராகவும் இருக்கலாம் அல்லது வர்ணனையாளராகவும் இருக்கலாம். கூடிய விரைவில் தெரிவிக்கிறேன்,” என ஆஷிஷ் நெஹ்ரா கூறினார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்கவீரர் டெல்லியை சேர்ந்த விரேந்தர் சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆஷிஷ் நெஹ்ராவை வர்ணனை பெட்டிக்கு அழைத்தார்.

2203 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட் எடுத்து அசத்தினார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. அந்த போட்டி அனைவருக்குமே நினைவில் இருக்கும். 1999 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகம் ஆன ஆஷிஷ் நெஹ்ரா, 18 ஆண்டுகள் விளையாடி இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகள், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 27 டி20 போட்டிகளில் விளையாடி 44, 157 மற்றும் 34 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்திய அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலேயான போட்டியின் போது முதன் முறையாக வர்ணனை பெட்டியில் உட்கார உள்ளார் டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் நெஹ்ரா.

இந்த போட்டியில் மழை விளையாடுமா?

கொல்கத்தாவில் மழை வருவது போல் இருப்பதால், இந்திய வீரர்கள் மற்றும் இலங்கை வீரர்கள் அனைவரும் மைதானத்தின் உட்புறமே பயிற்சி செய்தார்கள். கிடைத்த தகவலின் படி அடுத்த இரண்டு நாட்களுக்கு கொல்கத்தாவில் மழை நீடிக்கும். இதனால், முதல் போட்டி முதல் நாளிலேயே தொடங்க அதிக வாய்ப்பில்லை.

இந்தியா – இலங்கை மோதும் முதல் டெஸ்ட்:

Cricket, India, Hardik Pandya, Sri Lanka

இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்டில் வெற்றி பெற அந்த அணி கடுமையாக போராடும். சொந்த மண்ணில் ஏற்பட்ட முழுமையான தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. அந்த அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டனர்.

நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *