தமிழக வீரர் வாசிங்டன் சுந்தருக்கு அணியில் இடம்; முதலில் பேட்டிங் செய்கிறது இலங்கை அணி !!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன.
இலங்கையின் கொழும்பில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இறுதி போட்டிக்கான இலங்கை அணியின் ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீக்ஷன்னா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக துசன் ஹெமன்தா ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போல் வங்கதேச அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த சீனியர் வீரர்கள் அனைவரும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இது தவிர காயம் காரணமாக அக்ஷர் பட்டேல் விலகியதால் அவருக்கு பதிலாக தமிழக வீரரான வாசிங்டன் சுந்தருக்கு ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், பும்ராஹ், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
இலங்கை அணியின் ஆடும் லெவன்;
பதும் நிஷான்கா, குசால் பெரேரா, குஷால் மெண்டீஸ், சதீரா சமரவிக்ரமே, சாரித் அஸலன்கா, டி சில்வா, தசுன் ஷானகா, துனித் வெல்லால்கே, தசுன் ஹெமான்தா, பிரமோத் மடுசோன், மத்தீஷா பதிரானா.