Two consecutive centuries for @mvj888. This is his 11th Test ? #INDvSL pic.twitter.com/7igFLIW8ks
— BCCI (@BCCI) December 2, 2017
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி தேநீர் இடை வேலையில் 57 ஓவர்களில் 242 ரன் குவித்து 2 விக்கெட் மட்டுமே விட்டு கொடுத்தது. முரளி விஜய் 180 பந்துகலில் 101 ரன்னுடனும், கேப்டன் விராட் கோலி 101 பந்துகளுக்கு 94 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
https://twitter.com/KrithikaChauhan/status/936878969558769664?s=17
சிகர் தவான் 35 பந்துகளில் 23 ரன் எடுத்து திலருவன் பெரேரா பந்தில் சுரங்க லக்மாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். புஜரா 39 பந்துகளில் 23 ரன் எடுத்து கமகே பந்தில் அவுட் ஆனார்.

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் மழை பாதிப்பால் ‘டிரா’ ஆனது. நாக்பூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
https://twitter.com/KrithikaChauhan/status/936877586709233664?s=17
இந்த நிலையில் இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. துவக்க வீரர்களாக ஷிகர் தவானும், முரளி விஜயும் களமிறங்கினர். தவான் 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Murali Vijay celebrated his 2nd ? in as many games by performing a dab with Virat Kohli.#INDvSL pic.twitter.com/TkQ6N9rQCi
— Chinmay Jawalekar (@CricfreakTweets) December 2, 2017
நம்பர் ஒன்’ அணியான இந்தியா இந்த டெஸ்டிலும் இலங்கையை புரட்டியெடுக்கும் வேட்கையுடன் இருக்கிறது. இந்த டெஸ்டில் டிராவோ அல்லது வெற்றி பெற்றாலோ தொடர் இந்தியாவின் வசமாகி விடும். அத்துடன் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியிருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் உலக சாதனையை சமன் செய்து விடலாம். இது தான் இந்தியாவின் பிரதான குறியாகும்.

அதேசமயம் இலங்கை அணி, இந்த போட்டியில் வென்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேட்கையுடன் களமிறங்கி உள்ளது. இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன துவக்க வீரர் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக ஷிகர் தவானும், உமேஷ் யாதவுக்கு பதிலாக முகம்மது சமியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.