மண்ணைக் கவ்வியது இலங்கை, இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்யாசத்தில் இந்திய வெற்றி 1

இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முரளி விஜய் ஒரு அற்புதமான் கேட்ச் பிடித்தார், அந்த வீடியோஎ கீழே உள்ளது.

மண்ணைக் கவ்வியது இலங்கை, இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்யாசத்தில் இந்திய வெற்றி 2

இந்தியா – இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா மற்றும் இசாந்த் சர்மா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.மண்ணைக் கவ்வியது இலங்கை, இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்யாசத்தில் இந்திய வெற்றி 3

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் முரளி விஜய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 128 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த புஜாரா சதமும், விராட் கோலி அரைசதமும் அடிக்க நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்தது. புஜாரா 121 ரன்னுடனும், விராட் கோலி 54 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கோலி சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய புஜாரா 143 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரகானே 2 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.மண்ணைக் கவ்வியது இலங்கை, இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்யாசத்தில் இந்திய வெற்றி 4

5-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. அரைசதம் அடித்த ரோகித் சர்மா சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதேவேளையில் விராட் கோலி சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 5-வது இரட்டை சதம் இதுவாகும். விராட் கோலி 259 பந்தில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய விராட் கோலி 213 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 583 ரன்கள் குவித்திருந்தது. கோலி அவுட்டான சிறிது நேரத்தில் ரோகித் சர்மா சதம் அடித்தார். அவர் 160 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். அப்போது இந்தியா 176.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் எடுத்திருந்தது.மண்ணைக் கவ்வியது இலங்கை, இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்யாசத்தில் இந்திய வெற்றி 5

அத்துடன் இந்தியா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 405 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது, இமாலயத்தை நோக்கி நம்பிக்கை இல்லாமல் களம் இறங்கிய இலங்கை அணி, மூன்றாவது நாளின் இறுதியில் இருந்து சிறிது நேரத்திலும் ஒரு விக்கெட்டை இழந்தது.

பின்னர் 4வது நாளான இன்று துவக்க முதலே இந்திய பந்து வீச்சில் சிக்கித் திணறிய இலங்கை சின்னாபின்னமானது. அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது சுழலில் சிக்கி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மண்ணைக் கவ்வியது இலங்கை.மண்ணைக் கவ்வியது இலங்கை, இன்னிங்ஸ் மற்றும் 239 ரன் வித்யாசத்தில் இந்திய வெற்றி 6

இந்த போட்டியில் அஸ்வின் 8 விக்கெட்டும், ஜடேஜா 5 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். இரட்டை சதமடித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

https://twitter.com/PRINCE3758458/status/935018359619403776

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *