இந்தியா vs விண்டீஸ்; மாஸ் காட்ட ஆவலுடன் காத்திருக்கும் ரிஷப் பண்ட் !! 1

இந்தியா vs விண்டீஸ்; மாஸ் காட்ட ஆவலுடன் காத்திருக்கும் ரிஷப் பண்ட்

விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடருக்காக ஆவலுடன் காத்திருப்பதாக ரிஷப் இளம் வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்தியா vs விண்டீஸ்; மாஸ் காட்ட ஆவலுடன் காத்திருக்கும் ரிஷப் பண்ட் !! 2

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கவுஹாத்தி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

நாளை நடைபெற இருக்கும் முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ.,இன்றே அறிவித்தது. இதில் அறிமுக வீரராக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா vs விண்டீஸ்; மாஸ் காட்ட ஆவலுடன் காத்திருக்கும் ரிஷப் பண்ட் !! 3
LONDON, ENGLAND – SEPTEMBER 11: Rishabh Pant of India celebrates reaching his century during day five of the Specsavers 5th Test match between England and India at The Kia Oval on September 11, 2018 

 

இந்நிலையில் இந்த தொடர் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிஷப் பண்ட் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “எனது பங்களிப்பை 100 சதவீதம் சரியாக செய்ய ஏற்கனவே தயாராக காத்துள்ளேன், ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் விண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட ஆவலுடன் காத்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ரிஷப் பண்ட்டை போல கலில் அஹமது, முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் அம்பத்தி ராயூடு போன்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகள் அணிகள் முதல் ஒருநாள் போட்டி கவுஹாத்தியில் உள்ள பராஸ்பரே கிரிக்கெட் மைதானத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி;

ஷிகர் தவான், ரோஹித் சர்மா, அம்பத்தி ராயூடு, ரிஷப் பண்ட், மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, சையத் கலீல் அஹமது

 

Leave a comment

Your email address will not be published.