மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் தவான் விலக இருக்கிறார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட திட்டமிடப்பட்டிருந்தது. முதல்கட்டமாக, இரு அணிகளுக்கும் இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

விண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல்..! 1

இந்நிலையில், அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.

டி20 தொடர் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் சையத் முஷ்டாக் அலி டி20 லீக்கில் தவான் டெல்லி அணிக்காக விளையாடினார். அப்போது திடீரென அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்தார்.

விண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல்..! 2

தற்போது அவரது காயம் முழுமையாக குணம் அடையாததால் ஒருநாள் தொடரில் இருந்தும் நீக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை தவான் நீக்கப்பட்டால், சஞ்சு சாம்சன், ஷுப்மான் கில் அல்லது மயங்க் அகர்வால் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி20 தொடர்..

முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் இரண்டிலும் மோசமாக சொதப்பியதால் விண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

விண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல்..! 3

தற்போது டி20 தொடர் 1-1 என சமனில் இருப்பதால், 11ஆம் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் 3வது மற்றும் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. • SHARE

  விவரம் காண

  சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !!

  சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின்...

  இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் !!

  இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக பந்து வீச்சில்...

  இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி !!

  இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி...

  அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு !!

  அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட்கோலி...

  இந்திய அணியின் வெற்றி பயணம் தொடருமா..? நாளை இரண்டாவது டி.20 போட்டி !!

  விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில்...