வீடியோ : நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் தோனி கண் கலங்கினாரா ? 1

நேற்று நடந்த 4வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி மிகவும் பரிதாபமாக தோல்வி அடைந்தது.
மிகவும் எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி பரிதாபமாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் தோனி வழக்கம் போல் கடைசியில் அடித்து வெற்றி பெற வைப்பார் என அனைவரும் அவளுடன் எதிர் பார்த்து கொண்டு இருந்தோம் ஆனால் துர்த்தஷ்ட வசமாக தோனி அவுட் ஆனார் இதனால் இந்திய நெற்றி மிகவும் எளிய இலக்கை கூட அடைய முடியாமல் தோல்வி அடைந்தது.

இதனால் தோனி மிகவும் சோகமாக இருந்தார் இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது நீங்களே விடியோவை பாருங்கள் :

https://twitter.com/CricGif17/status/881625413927133185

நேற்று நடந்த ஆட்டத்தின் விவரம் :

வீடியோ : நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் தோனி கண் கலங்கினாரா ? 2

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

மேற்கிந்தியத் தீவுகளின் ஆன்டிகுவா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. யுவராஜ் சிங், அஸ்வின், புவனேஸ்வர் குமார் ஆகியோருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நிதானமாக ஆடிய கைல் ஹோப்-எவின் லீவிஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17.2 ஓவர்களில் 57 ரன்கள் சேர்த்தது. கைல் ஹோப், லீவிஸ் ஆகியோர் தலா 35 ரன்களில் வெளியேற, மேற்கிந்தியத் தீவுகளின் சரிவு ஆரம்பமானது.

வீடியோ : நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் தோனி கண் கலங்கினாரா ? 3

இதன்பிறகு வந்தவர்களில் ரோஸ்டான் சேஸ் 24, ஷாய் ஹோப் 25 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஜேசன் ஹோல்டர் 11, கிரண் பாவெல் 2, ஜேசன் முகமது 20 ரன்களில் நடையைக் கட்டினர்.

இதன்பிறகு வந்த ஆஷ்லே நர்ஸ் 4, தேவேந்திர பிஷு 15 ரன்களில் வெளியேற, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தது மேற்கிந்தியத் தீவுகள். ஜோசப் 5, வில்லியம்ஸ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலங்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரராக களமிறங்கிய ஷிகர் திவான் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரை தொடர்ந்து களிமிறங்கிய கேப்டன் வீராட் கோலி 3 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட்கள் சரிந்தாலும மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ரகானே பொறுப்பை உணர்ந்து விளையாடினார். அவர் 91 பந்துகளில் 60 ரன்கள் குவித்த நிலையில் பிஷோ பந்தில் ஆட்டமிழந்தார்.

பின் களமிறங்கிய தோனி நிதானமாக விளையாடி 54 ரன்களை குவித்தார். இப்பினும் மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறியதால் இந்திய அணி 49. 4 ஓவர்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹோல்டர் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் தொடரின் கடைசி ஆட்டம் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனால் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது தொடரை வெற்றி பெற இந்தியா அணி கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

ஒருவேளை இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் இந்த தொடர் ட்ராவில் முடியும்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *